Thursday , 17 October 2019

ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ்

ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும்.தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடத்துகின்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில், தவாஃப் செய்யும் போது, ஷாபி மத்ஹபினர் ஹனபியாக மத்ஹப் மாறிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். காரணம், ஷாபி மத்ஹபில் சம்சாரம் ஒரு மின்சாரம் ... Read More »

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது. 2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ ... Read More »

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர். ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற ... Read More »

ஹாஜி – யார் ?

இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஓட்டப் படுவதை பார்த்திருக்கின்றோம்.ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக,காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும்,ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும்போது, ஹாஜி பக்கிர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப் பட்டு ஒட்டப்படுகின்றன. ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை,நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் ... Read More »

விளம்பரமாகும் ஹஜ்

ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம். பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது. எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளைபிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5) தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அனைத்து வணக்கங்களிலும் “ரியா’ என்ற முகஸ்துதி, அதாவது பிறர் ... Read More »

அரஃபா நோன்பு

வீடியோவை பார்க்க புகைப்படத்தைசொடுக்கவும் அரஃபா நோன்பு உரை : பி.ஜைனுல் ஆபிதீன் குறிப்பு : இந்த வீடியோ பழைய வீடியோ என்பதால் ,இதில் குறிப்பிடும் தேதிகளையும் கிழமைகளையும் இந்த வருட அரஃபா நோன்போடு சம்பந்தப் படுத்திக் கொள்ளவேண்டாம். Read More »

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான். இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். ... Read More »

சவுதியில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்.நான் சவூதியில் இருக்கிறேன்.ஊரில் குர்பானி கொடுக்கிறேன்.கடைசி பத்து நாள் இங்கு நான் நகம்,முடி வெட்டாமல் இருக்க வேண்டுமா. நன்றி kader mohideen – saudi Arabia பதில் : குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது. “நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி ... Read More »

சயீ செய்யும்போது 2:158 வசனத்தை ஓதவேண்டுமா?

கேள்வி : சபா மர்வாவில் சை செய்யும் போது நபிகள் நாயகம் குர்கானின் இரண்டாம் ஆத்தியாயம் நூற்றி ஐம்பத்தி எட்டாவது வசனத்தை ஓதினார்கள் நாமும் அப்படி செய்ய வேண்டுமா? – ahamed ali, india. பதில் : தவாஃபுல் குதூம்’ எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு “ஸஃபா’ “மர்வா’வுக்கு இடையே ஓடினார்கள். ... Read More »