Thursday , 17 October 2019

FRTJ பதிவுகள்

பிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம்.

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு. இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2017 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் புனித ஹஜ் பயணம் செய்ய இருக்கும் பிரான்சில் வாழும் தமிழ் மொழியை படிக்க தெரியாத சகோதர, சகோதரிகளுக்கு மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய “நபி வழியில் நம் ஹஜ்” என்ற புத்தகம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு முற்றிலும் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது. ... Read More »

பராஅத் இரவு – பொய்யான ஆதாரங்களும் புதிய விளக்கங்களும்

பராஅத் இரவு பொய்யான ஆதாரங்களும் புதிய விளக்கங்களும் ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி. முஸ்லிம் சமுதாயம் ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவில் பராஅத் இரவு என்ற பெயரில் நோன்பிருப்பது, சிறப்புத் தொழுகை தொழுவது என பலவாறான வணக்கங்களைச் செய்து வருவதைப் பார்க்கிறோம். பராஅத் இரவு இஸ்லாத்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது எனவும் இந்த நாளில் நோன்பு, இரவுத் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைச் செய்யுமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் எனவும் ஒரு பிரிவினர் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களின் பார்வையில் பராஅத் ... Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும் இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனம் முற்றிலும் அறியாமையின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது குறித்து அப்துல் கரீம் misc அவர்கள் தக்க மறுப்பை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக் கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம். ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும், குளோனிங்கையும் ஒப்பிட்டு குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் பிஜே அவர்கள் ... Read More »

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள் Link

குர் ஆன் மட்டும் போதும் நபிகள் நாயகம் வழிகாட்டுதல் தேவை இல்லை என்று சொல்லி கொண்டு குர் ஆணை மறுக்கும் கூட்டத்துடன் விவாதித்த லிங்க் அவசியம் கருதி வெளியிடுகிறோம் . ரசாது கலீபா தூதனா பொய்யனா என்ற தலைப்பில் நடந்த விவாதம் 19 மெண்டல் கூட்டத்துடன் நடந்த விவாதம்  – Link   http://onlinepj.com/ayan-video/vivathangal/rasad_poyyan/#.WMkgwvk1_IUb   குர்ஆன் மட்டும் போதுமா 19 மெண்டல் கூட்டத்துடன் நடந்த விவாதம் – Link http://onlinepj.com/bayan-video/vivathangal/vahi_quran_mattuma/#.WMkj8fnhDIU   வஹீ குர்ஆன் மட்டுமா 19 மெண்டல் கூட்டத்துடன் நடந்த விவாதம் ... Read More »

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்னோடி

  ஊழலற்ற அரசியலுக்கு  ஒரு முன்னோடி எம்.எஸ்.ஜீனத் நிஸா, B.I.Sc. பணம் பத்தும் செய்யும்,  பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டியவர்களே அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அபாயம் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழலும், இலஞ்சமும் அவர்களை விட்டபாடில்லை. மக்களின் உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாவலர்களாக விளங்கும் காவல் ... Read More »

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 18h11 மணியிலிருந்து பிரான்சில் உள்ள TOULON, CLERMONT-FERRAND,PARIS ஆகிய நகரங்களில் ஜமாதுல் அவ்வல் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு FRTJ நிர்வாகம் 29-01-2017.   Read More »

ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்.

ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்.   காலம் கடந்து செல்லச் செல்ல, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அல்குர்ஆனின் நம்பகத் தன்மையும், அது இறைவனின் வார்த்தைகள் தான் என்ற அசைக்க முடியாத உண்மையும் மேலோங்கிக் கொண்டே போகின்றது. அல்லாஹ் தன் வார்த்தையான அல்குர்ஆனில் குறைந்து கொண்டு வரும் பூமியின் நிலப்பரப்பைப் பற்றி பேசுகின்றான். பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.  (அல்குர்ஆன் 13:41) அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் ... Read More »

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி

  (F R T J) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இன்ஷா அல்லாஹ் எதிர்  வருகிற  25.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு ஆன்லைன் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . உரை : அப்துல் ரஹீம் TNTJ மாநில செயலாளர் தலைப்பு : நவீன உலகில் நமது ஈமான் பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது அன்புடன் அழைக்கிறது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் கிளை F r t j . Read More »

இறை தூதர்களின் அழைப்பும், எச்சரிக்கையும்

இறை தூதர்களின் அழைப்பும் , எச்சரிக்கையும் !! அல் குர்ஆன் அத்தியாயம் 7 : 59 – 101  வரை  அல்லாஹ் கூறுகிறான் 7: 59. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; மகத்தான நாளின்  வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார். 7:60. “நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டிலேயே காண்கிறோம்” என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர். 7:61. “என் சமுதாயமே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. மாறாக நான் ... Read More »