Wednesday , 11 December 2019

தொழுகை

பெருநாள் தொழுகை

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் ... Read More »

பெருநாள் தொழுகை எத்தனை தக்பீர்?

பெருநாள் தொழுகையில் 3+3 கூடுதல் தக்பீர்களுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை என்பதை தெரிந்த சிலர் 7+5 தக்பீர்கள் தொடர்பான செய்திகளும் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளனர். இவர்களின் விமர்சனம் சரியானதா? அவர்களின் வாதம் என்ன? அதற்குரிய பதில் என்ன என்பதை இத்தொடரில் விரிவாக அலசுவோம். பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி, அன்னை ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), இப்னு ... Read More »

தஸ்பீஹ்தொழுகை ஓர் ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு75தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில்300தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி யாராவதுஇட்டுக்கட்டி சொல்லி இருப்பார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால்,அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அது போன்ற செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதி அதை விட்டு . தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்துமே ... Read More »

தராவிஹ் தொழுகை சுன்னத்தா ?ஃபர்ளா ?வாஜிபா ?

கேள்வி : Assalamu allikkum zee tharvih thoulghai sunnathha ? and parla ? and vajeeba ? தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ ,தராவிஹ் தொழுகை சுன்னத்தா ?பர்ளா ?வாஜிபா ? – Abdulrazak sharfudeen. U.A.E பதில் : இரவுத் தொழுகை கட்டாயம் தொழ வேண்டும் என்ற சட்டம் இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் கடமையான தொழுகைக்கு அடுத்ததாக சிறப்பித்து சொல்லப்பட்ட, அதிக நன்மையைப் பெற்றுத்தரக் கூடிய தொழுகை இரவுத் தொழுகைதான். “ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, ... Read More »

ஸஜ்தா சஹ்வு

மறதியினால் ஒருவர் தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை மறந்தாலோ, அல்லது குறைத்தாலோ, அல்லது கூடுதலாகச் செய்தாலோ அவர் அதற்குப் பகரமாக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதற்கு ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும்.  தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை விட்டது தொழுகையின் போது உறுதியாகத் தெரிந்தால் ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் ... Read More »

சுன்னத் தொழுகை

உபரியான வணக்கங்கள்  -சுன்னத் தொழுகை அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான். ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹ்வின் ... Read More »

நபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் – TNTJ

வீடியோவை காண புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 நபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் – TNTJ Read More »

லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத்தொழலாமா?

கேள்வி : assalamualaikum ,luhar tholuhaikku mun sunnaththu 4 raka ath ethai 2+2 aaha tholaamaa allathu 4 rakkaa athaaha tholalaama vibaram. தமிழாக்கம் : லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத் தொழ முடியுமா? விளக்கவும். abdul hadi – saudiarabia பதில் : நபியவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் சுன்னத்தை நான்கு ரக்அத்தாகவும் தொழுதுள்ளார்கள், இரண்டிரண்டாகவும் தொழுதுள்ளார்கள். இதற்கு கீழ் வரும் செய்திகள் ஆதாரமாகும். லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் ... Read More »