சவுதியில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன?

கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும்.நான் சவூதியில் இருக்கிறேன்.ஊரில் குர்பானி கொடுக்கிறேன்.கடைசி பத்து நாள் இங்கு நான் நகம்,முடி வெட்டாமல் இருக்க வேண்டுமா. நன்றி

kader mohideen – saudi Arabia

பதில் : குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.
“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

குர்பானி கொடுப்பவர் எங்கிருந்தாலும் சரி, எங்கு குர்பானியைக் கொடுத்தாலும் சரி குர்பானி கொடுப்பதற்குத் தீர்மானித்தவர் துல்ஹஜ் பிறை ஒன்றில் இருந்து குர்பானியைக் கொடுக்கும் வரை நகம், முடி போன்றவற்றை களையக் கூடாது.
கொடுப்பவர் எங்கிருந்தாலும் இதைத் தான் சட்டமாக இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

நீங்கள் ஸவுதியில் இருந்தாலும் குர்பானி கொடுப்பதற்கு நீங்கள் தீர்மானித்தால் இதுதான் உங்களுக்குறிய சட்டமாகும்.

(நிர்பந்தத்திற்கு உள்ளானவர்களுக்கு மாத்திரம் இஸ்லாம் விதிவிலக்கு தருகின்றது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.