பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
-வெப்துனியா
நன்றி TNTJ.NET

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாபர் மசூதியை இடித்த திரளான கரசேவகர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

பாபர் மசூதி இடிக்கப்படும் போது மேடையில் இருந்து பார்வையிட்ட பா.ஜனதா, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம், ராஷ்டிரீய சுயம் சேவக் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், வினய் கத்தியார், சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, பால் தாக்கரே, அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா உள்பட 21 தலைவர்கள் மீது கிரிமினல் சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி அலோக் சிங் விசாரித்து, அத்வானி உள்பட 21 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு கடந்த 2001ம் ஆண்டு மே 4ந் தேதி அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவில், சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆதாரங்களை கீழ் கோர்ட்டுகள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான கிரிமினல் சதி என்ற குற்றச்சாட்டு சரியாக விசாரிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


நக்கீரன் 18/02/2011 
அனுப்பியவர் : Fazrul Huck

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.