Sunday , 21 October 2018

இல்லற வாழ்க்கை

இல்லற வாழ்க்கை
மனிதனின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று திருமணம். ஜாதி, மதங்களை கடந்து இது மனிதனில் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாக ஒன்றிப் போய் விட்டது. ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, ஆன்மீகவாதி, நாத்திகவாதி என்று எல்லா தரப்பினரும் திருமண சுகத்தை அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். படைத்த இறைவன் இவ்வாறே ஆசை உள்ளவனாக மனிதனை படைத்துள்ளான்.
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14)
மனிதனாக பிறந்த எல்லா ஆண்மகனும் பெண்கள் மீது ஆசைபடக்கூ‎டியவனாவே படைக்கப்பட்டுள்ளான் என்பதை இறைமறை வசனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் தான் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாவும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களும் திருமணம் புரிந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
நபி (ஸல்) அவர்களும், திருமணம் செய்ய வசதிவாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்கள்.
இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள் : புகாரீ (5066), முஸ்லிம் (2485?)
மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் திருமணம். பெரும்பானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைக்கள் ஏற்பட்டு அது தொடர்கதையாக மாறிவிடுகிறது. பலரின் வாழ்க்கையையே தொடர்பு அறந்து அந்தரத்தில் தொங்குகிறது.
மனிதன் வாழ்க்கையில் பிரித்துப்பார்க்க முடியாத இந்த திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்கிறது? இதற்கு காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழிவகைகள் இருக்கின்றன? மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை பார்ப்போம்.
இல்வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை அழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
தாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படிம்தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இருப்பது மிக கஷ்டம்தான், அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம், அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ளவேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத்தரலாம்.
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (அல்குர்ஆன் 4:19)
மனிதனிடம் இருக்கும் தவறுகளை புரிந்து கொள்ளாமல் தன் விரும்பியபடி நடக்கவில்லை. என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம்தான் பெரும்பாலும் கணவன், மனைவிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பெண்கள் தொடர்பாக கூறி பின்வரும் பொன்மொழி அழகிய அறிவுரையாகும்.
5184 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَرْأَةُ كَالضِّلَعِ إِنْ أَقَمْتَهَا كَسَرْتَهَا وَإِنْ اسْتَمْتَعْتَ بِهَا اسْتَمْتَعْتَ بِهَا وَفِيهَا عِوَجٌ  رواه البخاري
பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால்  அவளை ஒடித்தே விடுவாய். அவளை அனுபவிக்க நினைத்தால் அவள் கோணலாக இருக்கும் நிலையிலேயே அனுபவிப்பாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி), நூல்கள் : புகாரீ (5184), முஸ்லிம் (2669?)
பெண்கள் இயற்கையிலேயே கொஞ்சம் சிந்தனை குறைவானவர்களாக இருப்பதால் அவர்களை முழுமையாக திருத்த முடியாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு பிடிப்பதுதான் புத்திசாலித்தனம். எனவே அவர்களை திருத்துகிறேன் என்று எண்ணி முழுமையாக அப்பெண்ணை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து செய்வதுதான்.
5090 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ رواه البخاري
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் : 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரித்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக, ஆகவே மார்க்க உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி), நூல்கள் : புகாரீ (5090), முஸ்லிம் (2661?)
மார்க்கம் தெரிந்த அதன்படி நடக்கக்கூடிய பெண்ணை மணமகளாக தேர்வு செய்ய வேண்டும் என்ற நபியின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.
கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது அவர்களை சேர்த்து வைக்கும் நன்நோக்கத்தில் அவர்களை அழைத்து, திருக்குர்ஆனும் நபிமொழிகளும் கூறும் அறிவுரைகளை சொல்லும் போது மார்க்கத்தைப் பற்றி அப்பெண் தெரிந்திருந்தால் மார்க்கத்தின் அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பாள். மார்க்கத்தின் அடிப்படையே தெரிதாவளாக அப்பெண் இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவிசாய்த்து கேட்பாள்?
எனவே மணமகளையோ மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படைப் பற்றி தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்து தேர்வு செய்யுங்கள்.
2668 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ رواه مسلم
இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம்
3175 أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ أَنْبَأَنَا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَمَنْصِبٍ إِلَّا أَنَّهَا لَا تَلِدُ أَفَأَتَزَوَّجُهَا فَنَهَاهُ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَنَهَاهُ فَقَالَ تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ رواه النسائي
அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய அன்பு செலுத்தக்கூடியவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகல் பின் யஸôர் (ரலி), நூல்கள் : நஸயீ (3175),
1417 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا غَيْلَانُ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ قَالَ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا أُفَرِّجُ عَنْكُمْ فَانْطَلَقَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضْ الزَّكَاةَ إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ فَكَبَّرَ عُمَرُ ثُمَّ قَالَ لَهُ أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ رواه ابوداود
“”அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது உமர் (ரலி) அவர்கள் நான் உங்கள் கவலையை நீக்கிறேன் என்று கூறிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று “”அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலை ஏற்படுத்திவிட்டது”” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைபடுத்துவதற்குதான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்கு பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான் என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ‎ý அக்பர் என்று கூறினார்கள். பின்னர் “” மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?”” என்று கேட்டுவிட்டு “” கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள், அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள், அவன் இல்லாத போது கற்பை பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி “” (தான் அது) என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (1471)
மேற்கூறிய நபிமொழிகளின்படி மணமக்களை தேர்வு செய்திருந்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளை சரிசெய்துவிடலாம்.
                                                                                                                                அபூ ஸமீஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

10 visitors online now
1 guests, 9 bots, 0 members
Max visitors today: 16 at 10:19 am
This month: 21 at 10-19-2018 01:35 am
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm