Thursday , 21 March 2019

நபிகள் நாயகத்தை பற்றிய படம் – ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி

சமீபத்தில் நாம் உயிரினும் மேலாக மதித்து வரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து சினிமா வெளியிட்டதையும் பிரான்ஸ் நாட்டில் வாரப் பத்திரிக்கையில்   நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து கார்ட்டூன் படமும் வெளியிட்டுட்டதையும் அதன் விளைவாக உலக மக்களிடையே பலத்த கொந்தளிப்பையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.இந்த இரு சம்பவங்களும் எதனால் ஏற்ப்பட்டது? இதன் வேர் என்ன ?இதன் தாக்கம் என்ன? என்பதை பார்த்தொமேயானால் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ள முடியும், உலகளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிதமாக கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம்போல் பரவி வருகிறது, இதை நேரடியாக தடுக்க திராணியற்றவர்கள் மீடியாவை தவறான முறையில் நமக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார்கள் ஏனென்றால் நேருக்கு நேர் நின்று போரிட தகுதியும் தைரியமும் இல்லாத புறமுதுகு காட்டிவரும் கோழைகளால் இவ்வாறுதான் செய்ய முடியும்.
மேலும் எந்த ஒரு தனி முஸ்லிமையோ, தனி இயக்கத்தையோ, தலைவரையோ, அல்லது (இஸ்லாமிய) நாட்டையோ தாக்கி பேசினால் உலக முஸ்லிம்களிடையே எந்த கலவரத்தையும் ஏற்படுத்த முடியாது. மேலும் வளர்ந்துவரும் இஸ்லாத்தில் வளர்ச்சியை கட்டுப் படுத்த ஒரே வழி உலக முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதித்து வரும் மாநபி (ஸல்) அவர்களை விமர்சித்தால் மட்டுமே அதன் விளைவுகள் உலகெங்கும் பிரதிபலிக்கும் என்பதை அறிந்தே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்கள். இதை அறியாத ஒரு சிலர் பொதுசொத்தை சேதப் படுத்துவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் இது போன்ற அசம்பாவிதங்களை காரணம் காட்டியே இஸ்லாமியர்கள் அனைவரும் இப்படிதான் என்றும் அவர்களின் மதமும் இப்படிதான் போதிக்கிறது என்றும் நடுநிலையாளர்களின் மனங்களில் வெறுப்பை விதைக்கின்றார்கள்.
குறிப்பாக அமெரிக்கா,லண்டன் மற்றும் பிரான்சில் மிக அதிகளவில் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு மாறிவருகிறார்கள் அவர்களை அதிலிருந்து திசை மாறவைத்து குழப்பி மனதை மாற்ற மீடியா ஒன்றுதான் வழி மேலும் உலக மீடியா இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் கைகளில் இருப்பதால் அதை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள் இந்த சூழ்ச்சியை நாம் தெளிவாக புரிந்து கொண்டு நாம் வன்முறையில் ஈடுபடாமலும் அமைதியான முறையிலும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மீடியாவை கொண்டே அதற்க்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும். ஒவ்வொருவரும் facebook மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் மேலும் உள்ளூர் தொலைகாட்சிகள் போன்ற அணைத்து மீடியாக்களையும் பயன்படுத்தி இஸ்லாத்தின் தவறான புரிதல்களை களைய வேண்டும் தவறான பிரசாரத்திற்கு பதிலடியும் கொடுக்க வேண்டும்.
நமது கோபத்தை தவறான வழியில் வெளிப்படுதிவிடகூடாது அது இஸ்லாத்தின்பால் கவரபபட்டவர்களின் மனங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடும் அவர்களில் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது. மேலும் அல்லாஹ்விடம் பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுவோமாக, அல்லாஹ்வின் பிடி கடுமையானது.
குறிப்பு : நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக உருவாக்கப்பட்ட படத்தை, பிரபல வீடியோ ஷேரிங் இணையதளமான யூட்யூப் நீக்கப் மறுப்பதால்,கூகிள்(Google) பொருட்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும்.நாமும் FRTJ இணையதளத்தை Bloggerஇலிருந்து மாற்ற இருக்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல் குர்ஆன் 3:200)

கட்டுரை : இன்சாப் 
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

7 visitors online now
5 guests, 2 bots, 0 members
Max visitors today: 13 at 06:43 am
This month: 19 at 03-19-2019 07:58 am
This year: 20 at 01-07-2019 12:51 am
All time: 62 at 12-04-2017 07:50 pm