Friday , 19 April 2019

எனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கமாட்டானா ?

கேள்வி : அச்சலம் அலைக்கும், எனது கேள்வி நான் வழக்கை முழுவதும் கஷ்ட படுபவனாக உள்ளேன்,என் இரு மத குழைந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தேன் பிறகு இரண்டு வருடத்திற்கு பிறகு என் தந்தைக்கு ஹார்ட் பிளாக் அறுவை சிகிச்சை செய்தேன் இதற்கு நடுவில் என் உடல்நிலை ரொம்ப மோச மாகிவிட்டது பிறகு தெரியவந்தது எனக்கு கிட்னியில் கல் உள்ளது ,இந்த நோய் அறியாமலேயே நான் ரொம்ப செலவு செய்தà  விட்டேன் ,இப்பொழுது மருந்து வாங்கி கொண்டுயிருக்கிறேன்,என் தொழிலும் சரியில்லை ,அப்பா பல வர்சமாக வெளிநாட்டில் உள்ளார் ,அவருக்கு அறுவைசிகிச்சை முடிந்த பின்பும் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் ,இன்று அவரால் முடியவில்லை, எனக்கும் அவரை அனுப்ப விருப்பம் இல்லை ,என் குடும்பமோ ,பெரியது நான் சம்பாரிப்பது பத்தாது ,என் குடும்பத்தை காப்பற்ற நான் மிகவும் வெயிலில் சுத்தி திர ிந்து கஷ்ட படுகிறேன் ஒண்ணுமே சம்பரிப்பு காணோம் ,அதிகமாக வெய்யிலில் சுத்தினாலும் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்னும் நோய் அதிகரிக்குது,ஏன் வழக்கை முழுவதும் கஷ்டங்களே உள்ளன,வறுமை தலைதுக்குது செலவுகளோ அதிகம் ,பெரி குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு மத விட்டின் செலவு மிகவும் பாரமாக உள்ளது ,ஒரு சின்ன குடும்பத்தின் செலவோ 3 ,000 ருபாய் ,அனால் நான் பிறந்து வளந்த குடு ம்ப மாத செலவு 10 ,000 ருபாய் இதற்காக நான் மிகவும் பாடுபடுகிறேன் ,என்னால் முடியவில்லை,ஏன் கேள்வி எனக்கு ஏன் அல்லாஹ் துன்பத்துக்கு மேல் துன்பம் தருகிறான் பல வருசங்கள் ஓடி விட்டன என் கஷ்டங்கள் இன்னும் போகவில்லை இதற்க்கு இஸ்லாமிக் முறையில் தீர்வு என்ன ? நான் அல்லாஹ் வை தவிர யாரையும் வணங்குவதில்லை ,நான் ஒரு தவ்ஹீத் வாதி,எனக்கு இஸ்லாமிக் முறையில் பதில் சொல்லுங்கள்

– Mohd rafik shaik

பதில் : உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலக மக்களின் விடிவுக்கு இறைவன் மூலமாக நமக்கு திருமறைக் குர்ஆன் என்ற ஒரு பொக்கிஷத்தை பெற்றுத் தந்துள்ளார்கள். திருமறைக் குர்ஆன் உங்கள் பிரச்சினைக்கு மிகத் தெளிவான பதிலைத் தருகிறது.

பிரச்சினைகள் நமது ஈமானை சோதிப்பதற்கே!

இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2-155)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்மை எப்படியெல்லாம் சோதிப்பான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறான். குறிப்பிட்டு விட்டு வசனத்தின் இறுதியில் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! என்றும் குறிப்பிடுகிறான். நமக்கு துன்பங்களை அல்லாஹ் தந்து நம்மை சோதிக்கும் போது பொருமையாக நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதைத் தான் இறைவன் கண்காணிக்கிறான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156) 

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (2-157)
மேற்கண்ட வசனங்களில் துன்பம் நேருகின்ற நேரத்தில் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

செல்வம் இருப்பதும் சோதனை இல்லாமல் இருப்பதும் சோதனையே!

செல்வத்தைப் பொருத்தவரையில் அது நம்மிடம் நிறைய இருப்பதும் சோதனை தான் இல்லாமல் இருப்பதும் சோதனைதான். இருப்பவன் அதை எப்படியெல்லாம் செலவு செய்கிறான் என்று இறைவன் சோதிப்பான் இல்லாதவன் செல்வம் இல்லாத போது இறைவன் விஷயத்தில் எப்படி இருப்பான் என்று இறைவன் சோதிப்பான்.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குறிய சோதனை செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் கஃப் பின் இயாழ் (ரழி) நூல் திர்மிதி
சோதனையான ஒரு விஷயத்தில் இறைவனிடமே நமது கோரிக்கையை நாம் ஒப்படைக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் . என் அடியானின் இரு கண்களை நான் (போக்கிவிடுவது) கொண்டு அவனைச் சோதித்து அவன் அப்போது பொருமையாக இருப்பானானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாக சுவர்க்கத்தை வழங்குவேன் என நபியவர்கள் கூறியதை நான் செவிமடுத்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் – புகாரி 5653)
இப்படி பல சந்தர்ப்பங்களில் சோதனைகளை பொருத்துக் கொள்வர்களுக்கு இறைவன் தனது அருளைப் பொழிவதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட நேரங்களில் நாம் கண்டிப்பாக பொருமையாக இருப்பதுதான் மிகவும் சிறந்த பண்பாகும்.
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10) 

அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான் (2-153)
ஆக அன்பின் சகோதரர் அவர்களே உங்கள் பிரச்சினையை இறைவனிடம் கூறி மன்றாடுங்கள் இறைவன் கண்டிப்பாக அவற்றை நீக்குவான்.

குறிப்புஉங்கள் கேள்வி பற்றிய மேலதிக விபரத்திற்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் ரமழான் 30 நாட்களும் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையை http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/p_2/ என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*