அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
முஹர்ரம் (ஹிஜ்ரி 1448) மாதத்திற்கான பிறை
அறிவிப்பு.
பிரான்ஸில் கடந்த மாதம் 17/05/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று துல்ஹஜ் மாதம் ஆரம்பம் ஆனதின் அடிப்படையில் முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான நேற்று 15-06-2026 திங்கள்கிழமை மஹ்ரிப் நேரத்தில் முஹர்ரம் (ஹிஜ்ரி 1448) பிறை தென்படாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியில் துல்ஹஜ் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொண்டு இன்ஷா அல்லாஹ் இன்று 16-06-2026 செவ்வாய்கிழமை மஹ்ரிபிலிருந்து முஹர்ரம் மாதம் ஆரம்பம் ஆகும் என்பதை நமது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25-06-2026 வியாழக்கிழமை முஹர்ரம் 9 மற்றும் 26-06-2026 வெள்ளிக்கிழமை முஹர்ரம் 10 ஆசூரா நோன்பு நோற்கக்கூடிய நாளாகும்.
இப்படிக்கு.
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.
16/06/2026.
