ஃபிரான்ஸ் 4வது இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

கடந்த சனிக்கிழமை 14/01/2012 அன்று பிற்பகல் 3:00 மணி அளவில் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்! .

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJவின் துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் அறிமுக உரையை  நிகழ்த்தினார்கள். அதன்பிறகு TNTJ மாநில பொதுசெயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “ஏகதுவதின்பால் இனைந்து செயல்படுவதின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். 

அதன்பிறகு கேள்விபதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொடர்ந்து இடைவிடாமல் வந்த வண்ணம் இருந்தார்கள்.எதிர்பார்த்ததற்கும் அதிகமாக மக்கள் வந்துவிட்டதால் அமர இடமில்லாமல் வெளியில் உள்ளவர்களுக்கு தனியாக தொலைக்காட்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

மார்க்கம்,சமுதாயம் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறப்பாக பதிலளித்தார்கள்.நேரமின்மையால் பல பெண்கள் கேள்வி கேட்க இயலாமல் போய்விட்டது இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.மேலும் அடுத்த முறை மண்டபம் ஒன்றை பிடித்து இன்னும் பெரிய அளவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கத்தை நிகழ்த்தலாம் என்று அனைவரும் ஆலோசனை கூறினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக நபிவழி தொழுகை முறை செய்துகாட்டப்பட்டது.இது மிகவும் பயனுள்ளதாக இருந்தாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியை நேரிலும் www.onlinepj.com மற்றும் www.frtj.net இணையதளங்களில் நேரடியாக உலகம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டு பயனடைந்தனர்.

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் பெரும்பாலும் விற்று தீர்ந்தது.பின்னர் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தினரால் தொகுக்கப்பட்ட “இஸ்லாம் என்றால் என்ன?” என்ற விழிப்புணர்வு நோட்டீஸ் அனைவருக்கும் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் வழங்கப்பட்டது.இதை முக்கியமாக மாற்று மதத்தினரிடையே கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கையுடன் நிகழ்ச்சி சிறப்பாகவும் நிறைவு பெற்றது.

FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது !!

– ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.