முகத்திரை சட்டத்தினால் சர்கோசி கட்சிக்கு பின்னடைவு

பிரான்ஸ் நாட்டின் UMP கட்சி கடந்த 26 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மத்திய பிரான்சில் உள்ள மெரிடியன் ஹோட்டலில் நாட்டின் மதச்சார்பின்மையைப் பற்றி விவாதம் நடத்தியது.அதில் 26 யோசனைகள் முன்வைக்கப் பட்டது.இந்த விவாதத்தில் செய்தி தொடர்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்தது மட்டுமல்லாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.இந்த விவாதத்தில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


பிரதமர் பிரான்கிஸ் ஃபில்லோன் மற்றும் பல அமைச்சர்களும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளவில்லை.இஸ்லாத்தைப் பற்றிய இந்த பிரச்சனை சர்கோசி ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெரியதாகப் பார்க்கப் படுகிறது.UMP கட்சியின் தலைவரான ஜீன் பிரான்கிஸ் என்பவரால்தான் பிரான்சில் பெண்கள் முகம் மறைக்கத் தடை சட்டம் கொண்டு வர காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.இந்த சட்டத்தினால் அடுத்த வருட அதிபர் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு பெருகும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் எதிர்கட்சித் தலைவரான பில்லோன் “இந்த பிரச்சனையால் 2012 தேர்தலில் சர்கோசி பெரும் பின்னடைவை சந்திப்பார்” என்று தெரிவித்தார்.

இந்த விவாததினால் தமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சர்கோசி தவறாக நினைத்துக் கொண்டுருக்கிறார் என்று லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்களாக பணியாற்றும் மேதிவ் மோரன் தெரிவித்தார்.மேலும் அவர்கள் கூறுவதாவது “இந்த விவாதத்தை ஆதரிப்பவர்களை வைத்து நாம் தேர்தலில் வென்று விடலாம் என்று அவர் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்.சர்கோசியின் இது போன்ற செயல்களுக்கு அமைச்சர்கள் அனைவரும்  ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை.UMP கட்சியின்யின் இந்த செயல்பாட்டினால் சர்கோசிக்கு ஆட்சிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனாலும் சர்கோசி வேறு பிரச்சனைகளை காட்டி இதை மறைத்து விடக் கூடிய ஆற்றல் கொண்டவர்.இந்த விவாதம் கடுமையாக நடைப்பெற்றால் சர்கோசி வேறு சவால்களை சந்திக்க தயாராக வேண்டிய நிலை உண்டாகும்.”

விமர்சகர்கள் இந்த விவாதத்தை பற்றி கருத்து தெரிவிக்கையில்,எதிர்கட்சியான National Front கட்சியிடமிருந்து ஓட்டுக்களை பறிக்கும் விதமாக நடத்தப்படும் அரசியல் நாடகமாகவே இதை கருதுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சியான Socialist கட்சி 35 சதவீத இடத்திலும் அதிபர் Nicolas Sarkozy யின்  UMP கட்சி வெறும் 18 சதவிகித ஓட்டுக்ககளையே பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்த தேர்தல் முடிவு Nicolas Sarkozy யின்  UMP கட்சி பின்னடைவை சந்திப்பதையே காட்டுகிறது.



(மேல் குரிப்புட்டுள்ள செய்திக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்திர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழை இருந்தால் தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.