தினகரன் நாளிதழில் வெளியான காதலர் தினத்தை பற்றிய செய்தி

காதலர் தினம் ஆணுறை விற்பனை அமோகம்!!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த நாளில், வாழ்த்து அட்டைகள், சாக்லெட், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வது வழக்கம். அந்த வகையில், ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரை விற்பனையும் அமோகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினத்துக்கு முன்னும் பின்னும் என ஒருவார காலத்துக்கு உற்சாகம் கரைபுரளுவதால் ஆணுறை விற்பனை 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். இந்த நாட்களில் சுதந்திரமாக இருப்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே இதற்குக் காரணம் என ஒரு மருந்து கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

– தினகரன் 13-02-2010

இதுதான் உலகம் போற்றும் உச்சக்கட்ட நாகரிகம்.இந்த வெட்கக் கேடான செயலை கொண்டாட ஒரு தினம்.இந்த நிலை நம் சமுதாயத்திலும் நுழைந்துவிட்டதுதான் மிகப் பெரும் வேதனை.இஸ்லாத்தை மறந்து போதையிலும் மனோ இச்சையிலும் மூழ்கிப் போனால் இந்த கேடுகெட்ட நிலை தான் ஏற்படும் .எனவே இஸ்லாமிய சமுதாயமே!!காதலர் தினத்தை புறக்கணியுங்கள்! இதன் மோசமான விளைவுகளை மற்ற நம் இஸ்லாமிய சகோதரர்களிடமும்  விழிப்புணர்வு ஊட்டுங்கள். 

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.(அல் குர்ஆன் 24:30)

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல் குர்ஆன் 24:31)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.