மாணவி ஹதியா |
மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.
“இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை” என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
கல்லூரி DCயிடமிருந்து ஊக்குவிக்கும் அளவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றாலும் அவரிடமிருந்து நேரடியாகவோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாகவோ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
.
ஹதியா தன்னுடைய இரெண்டாம் வருடத்தில் இருந்து ஹிஜாப் அணிய தொடங்கியுள்ளார்.ஹதியாவின் ஹிஜாப் அணிவதை கல்லூரி நிர்வாகம் வரவேற்கவில்லை ,இதற்க்கு கல்லூரி தரப்பில் கூறும் கூரணம் சீருடை சட்டத்தை இது மீருவதாக உள்ளது என்பதே ஆகும்.
முதலில் பெண்களுக்கான அறையில் இருந்து பாடங்களை எழுத ஹதியாவுக்கு கல்லூரி அனுமதி அளித்திருந்தது பிறகு கல்லூரிக்கு வருவதை விட்டு அவரை நிர்வாகம் தடை செய்தது.இவர் கல்லூரியிலிருந்து தடுக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் இந்த போக்கை பற்றி தக்ஷினா கன்னட துணை கமிஷனர் சன்னப்பா கௌடாவிற்கு ஹதியா புகார் கடிதம் எழுதியுள்ளார்.துணை கமிஷனரிடமிருந்து சாதகமான மறுமொழி வரவில்லையெனில் பெரியவர்களின் ஆலோசனைக்கு பிறகு ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதிக்கு எழுத இருப்பதாக 17 வயது ஹதியா தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் பெண்களை தங்கள் உடலை மறைப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கிறது.ஹிஜாபை மத அடையாளத்திற்காக இஸ்லாம் அணிய சொல்லவில்லை.இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் மக்களில் 140 மில்லியன் பேர் முஸ்லிம்கள்.உலக அளவில் இந்தோனேசியா விற்கும் பாகிஸ்தானுக்கும் அடுத்த அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு இந்தியா.
பாகுபாடு
கடந்த ஒரு வருடமாக ஹிஜாபின் உரிமைக்காக ஹதியா போராடி வந்திருக்கிறார்.இவருடைய இந்த முயற்சிக்கு கல்லூரியில் உள்ள 50 முஸ்லிம் மாணவர்களும் ,15 முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
கல்லூரியில் பதற்றம் உண்டாக்குவதாக முதன்மை ஆசிரியர் கூறுகிறார் ஆனால் என்னுடைய உரிமையை மீட்க்கும் காரணத்திற்காகவே இதை நான் செய்கிறேன் என்றும் என்னுடைய படிப்பை முடிப்பதே என்னுடைய நோக்கம் என்றும் ஹதியா முதன்மை ஆசிரியரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஹதியா அந்த கல்லூரியில் ஹிஜாபுக்காக போராடும் முதல் பெண் அல்ல.ஆயஷா அஷ்ம்ன் (19) என்ற மாணவி ஏற்கனவே தன்னுடைய தலையை மறைக்க கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு கல்லூரிக்கு மாறியுள்ளார்.
உமைரா காதுன் ,சமூக சேவகர் கூறுகையில் ‘ஹிஜாப்’ என்பது இஸ்லாத்தின் ஒரு அங்கமாகும் அதை அனைவரும் மதிக்க வேண்டும்.கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது தமது நோக்கம் இல்லை.
இந்து மதம் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்வின் அனைத்து நடைகளிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் 13% இருக்கும் முஸ்லிம் மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.முஸ்லீம்கள் வேலைவாய்ப்பிலும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.பொது சேவை ஊழியர்களாக 7%க்கும் குறைவாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்,ரயில்வே தொழிலாளர்களாக வெறும் ஐந்து சதவிகிதம்,வங்கி ஊழியர்களாக வெறும் நான்கு சதவிகிதம்,இந்திய ராணுவத்தில் உள்ள 1.3 மில்லியனில் வெறும் 29,000 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்கிறது புள்ளி விபரம்.
இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.முஸ்லிம்கள் கல்லூரிகளை அதிகமாக நிர்வகிக்க வேண்டும்.ஹிஜாப்,தாடி போன்றவை இஸ்லாத்தின் கட்டாய கடமை என்று இந்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.இதுபோன்ற இஸ்லாத்தின் கடமைகளை தடுப்பது முஸ்லிம்களின் உரிமையை பறிப்பது போல் ஆகும் என்பதை நாம் அனைவரும் இந்திய அரசுக்கு வலியுறுத்த கடமை பட்டுள்ளோம்.
செய்தி : Onislam.net