லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத்தொழலாமா?

கேள்விassalamualaikum ,luhar tholuhaikku mun sunnaththu 4 raka ath ethai 2+2 aaha tholaamaa allathu 4 rakkaa athaaha tholalaama vibaram.

தமிழாக்கம்லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத் தொழ முடியுமா? விளக்கவும்.

abdul hadi – saudiarabia

பதில்நபியவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் சுன்னத்தை நான்கு ரக்அத்தாகவும் தொழுதுள்ளார்கள், இரண்டிரண்டாகவும் தொழுதுள்ளார்கள். இதற்கு கீழ் வரும் செய்திகள் ஆதாரமாகும்.

லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1200
‘லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ 1182
சிலர் சுன்னத்துத் தொழுகைகளை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் நான்காகத் தொழக் கூடாது என்று ஒரு ஆதாரத்தை முன் வைக்கிறார்கள். அதன் விபரத்தைக் காண்போம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர், “இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். (அதன் நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (கடைசியில்) ஒரு ரக்அத் தொழுதுகொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள். (புகாரி – 472)

மேற்கண்ட செய்தியை ஆதாரம் காட்டி சுன்னத்தான தொழுகைகளை நான்காக தொழக் கூடாது இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று வாதிடுகிறார்கள் ஆனால் அவர்களின் வாதத்திற்கு மேற்கண்ட செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை.

ஏன் என்றால் இரவின் உபரியான தொழுகை தொடர்பாக நபியவர்களிடம் கேட்க்கப்படுகிறது. அதற்கு பதில் அளித்த நபியவர்கள் இரண்டிரண்டாகத் தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். இரவில் தொழும் உபரியான தொழுகைகளைத் தான் இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமே தவிர பகல் நேர உபரியான தொழுகைகளையும் இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று வாதிடுவதற்கு மேற்கண்ட செய்தியில் எந்த முகாந்திரமும் கிடையாது.

பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.