கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு.எனது கேள்வி ஜமாஅத் தொழுகை பற்றியது, கணவனும் மனைவியும் மட்டும் வீட்டில் இருந்தால் ஜமாத்தாக எவ்வாறு தொழலாம் என்பதை பற்றி விளக்கம் தரவும். ஜஜாக்கல்லாஹு ஹைரன்.
– Mohamed Rucknudeen, France.

ஒரு இரவு நான் நபி (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக எனது கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நூல் : புகாரி – 728 முஸ்லிம் – 1399
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இரண்டு பேர் தாராளமாக ஜமாத்தாக தொழலாம். அந்த இரண்டு பேர் கணவன் மணைவியாக இருப்பதில் தவறில்லை. இதே நேரம் இரண்டு பேர் தொழும் தொழுகையில் பொதுவாக ஜமாத் தொழுகையில் இமாமுக்குப் பின்னால் அவரைப் பின்பற்றித் தொழுபவர் இருப்பதைப் போன்றல்லாமல், இமாமும், பின்பற்றித் தொழுபவரும் சேர்ந்து நிற்க வேண்டும்.
கணவன், மணைவி இருவரும் தொழும் தொழுகையில் கணவன் இமாமாகவும், மணைவி பின்பற்றித் தொழுபவராகவும் இருக்க வேண்டும். மணைவி இமாமாக நின்று கணவர் பின்பற்றித் தொழுபவராக இருப்பதற்கு எந்த விதமான ஆதாரமும் குர்ஆன், சுன்னாவில் காணப்படவில்லை.
பதில் : ரஸ்மின் MISc