கெய்ரோ : பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு உலகின் பெரிய அளவில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை பற்றி கண்காட்சி ஒன்றை நடத்த இருக்கிறது.இஸ்லாமிய ஆன்மீகத்தை பற்றி உலக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட இருக்கிறது.
“பிரிட்டிஷ் அருங்காட்சியத்தின் இந்த முயற்சி உலக மக்களிடம் இஸ்லாத்தை பற்றியும் ,ஹஜ்ஜின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆழமாக புரிந்துக் கொள்ள வழி வகுக்கும்” என்பதாக பிரிட்டிஷ் அருங்காட்சியத்தின் இயக்குனர் Neil MacGregor ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்தார்.
இஸ்லாத்தின் கடமைகளை வெளிப்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நடத்தும் முதல் பெரிய கண்காட்சியாக இது அமையும். மேலும் ஜனவரி 26 முதல் ஏப்ரல் 15, 2012 வரை இந்த கண்காட்சி செயல்படும். இந்த கண்காட்சியில் புனித நிலங்ககளை பற்றிய தொல்பொருள் சுவடிகள், ஜவுளிகள் வரலாற்று புகைப்படங்கள் மற்றும் சமகால கலை போன்றவை காட்சிக்கு வைக்கப்படும்.
கண்காட்சி மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கித்துவம் அளிக்கும் : ஹஜ் பயணம் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய வழிகள் , ஹஜ் செய்யும் முறை மற்றும் அதன் தொடர்புடைய சடங்குகள், மக்காவை பற்றிய வரலாறு மற்றும் முக்கியத்துவம்.
இந்த கண்காட்சி முஸ்லிம் அல்லாத பார்வையாளர்களுக்கு இஸ்லாத்தை பற்றியும் ஹஜ்ஜை பற்றியும் நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்தும் என்று அருங்காட்சியகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“முஸ்லிம் அல்லாதவர்கள் பார்க்க முடியாத இஸ்லாத்தின் ஹஜ் மற்றும் அதன் நம்பிக்கையை அவர்கள் ஆராயவும் இது ஒரு உலகளாவிய இஸ்லாமிய உணர்வு உருவாக்கும் அத்தகைய ஒரு முக்கியத்துவத்தை இது பெரும்” என்பதாக MacGregor தெரிவித்தார்.
பெரிய நிதி சேவை வழங்குநர் மற்றும் கலாச்சார நிறுவனம் சேர்ந்து நடத்தும் இந்த கண்காட்சி சகிப்புத்தன்மை, ஒற்றுமை மற்றும் பிறர் கொள்கைகளை புரிந்து ஊக்குவிக்கும் நோக்கம் போன்றவற்றை ஊக்குவிக்கும் என்று ஹுசைன் நம்புகிறார்.மேலும் அவர் கூறியதாவது இந்த கண்காட்சி மற்ற மக்களின் உணர்வுகள்,கலை மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்வது சர்வதேச வணிகம் செய்வதற்கு அவசியமானதாகும்.
மொழிபெயர்ப்பு : முஹமது ரஃபீக்(Webmaster)
நன்றி : www.onislam.net