மனிதனின் சட்டங்களும்,இறைவனின் சட்டங்களும்

இறைவனின் சட்டங்களும்,மனிதனின் சட்டங்களும் என்ற இந்த கட்டுரையின் நோக்கம் இறைவனின் அருட்கொடையான குர்ஆன் கூறும் மகத்தான சட்டங்களின் பயனை புரிந்து கொள்வதும் அவற்றை பயன்படுத்தி மறுமையில் வெற்றி பெருவதுமேயாகும். மனிதனின் சட்டங்கள் காலப்போக்கில் மாறக்கூடியவையும்,முரண்பாடுகள் நிறைந்ததும் ஆகும்.அந்த சட்டங்கள் ஏழைகளுக்கு ஒருவிதமாகவும் வசதிவுள்ளவர்களுக்கு வேறு மாதிரியாகவும் வளைந்து கொடுக்கும் அதி சுயநலங்கள் கலந்திருக்கும்.அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றும் போது (மெஜாரிட்டி) அதிகமானவர்கள் பயன்பெறும் விதமாகவும்,ஒருசிலர் பாதிக்கப்பட்டால் பிரச்சனையில்லை என்றும் தனி மனித பாதிப்பு பற்றிய அக்கறை அறவே இருக்காது . அரசாங்கத்திற்கு வருவாய் இருக்குமா என பார்ப்பார்கள் உதாரணமாக சிகரெட் மது புகையிலை போன்றவற்றால் மனிதனுக்கு 100% சதவிகிதம் தீங்கு விளைவிப்பவை என தெரிந்திருந்தும் அதை தடை செய்ய போதுமான அதிகாரம் இருந்தும் அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கும் என்ற காரணத்தினால் அதை தடை செய்யாமல் உடல் நலத்திற்கு தீங்கு ,குடி குடியை கெடுக்கும் என்று கண்ணில் படாதவாறு ஒரு ஓரத்தில் எழுதி வைத்திருப்பார்கள் .


ஒரு சிலரின் நலத்திற்காக இந்த சட்டங்கள் பலரின் உடல் நலத்தை கெடுத்து இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் ,இதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை .உடல்நலத்தை கெடுத்து நாம் எதை வாங்க முடியும் .விலை மதிப்பில்லாததற்கு பகரமாக ஒன்றுக்கும் ஆகாததை திணிப்பதுதான் மனித சட்டத்தின் நோக்கம் மேலும் ஒரு சட்டம் இயற்றும்போது அந்த சட்டத்தால் அவர்களின் ஆட்சிக்கு பிரச்னை வருமா?அது ஓட்டுக்களை பெற்று தருமா மக்கள் ஆதரவு அளிப்பார்களா என்றெல்லாம் சுயநலத்தோடு நிறைவேற்றுவார்கள் .பல நேரங்களில் நல்ல சட்டங்கள் அமுல் ஆகாமலே போய் விடுகிறது .மேலும் குறிப்பிட்ட அளவுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறில்லை அளவுக்கு மீறி குடித்துவிட்டு ஒட்டுவதுதான் தவறு என்றெல்லாம் சட்டம் இருப்பதை கண்கூடாக காணலாம் .ஆனால் வாகனம் ஓட்டாத மற்ற சமயங்களில் நன்றாக மூக்கு முட்ட குடித்து நாசமாகப் போனாலும் மாரடைப்பு வந்து இறந்தாலும் யாருக்கும் அக்கறை இல்லை .

சட்டம் என்பது சமமாக இருத்தல் வேண்டும் வசதி பெற்றவர்கள் பணத்தாலும் அதிகாரத்தாலும் சட்டத்தின் ஓட்டைகளை தனக்கு சாதகமாக பயன் படுத்தி தப்பித்துகொல்வதை கண்கூடாக காண்கிறோம்.எத்தனையோ. நாட்டின் முன்னால் அதிபர்கள் தங்கள் வீடுகளில் கட்டுகட்டாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக செய்திதாள்களில் படித்திருப்பிர்கள்.
ஆனால் மக்கள் அவர்களை ஆட்சியை விட்டு அகற்றியவுடன் தங்கள் நாட்டை விட்டு ஓடி வேறு நாட்டில் தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள்.பொது மக்கள் அகதிகளாக ஒரு நாட்டில் தஞ்சம் கேட்டல் அவர்களை அனுமதிக்காத சில நாடுகள் ஊழல் செய்து கோடிக்கணக்கான மக்கள் வயிற்றில் அடித்து நாட்டையே சுரண்டிய முன்னாள் அதிபர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு அளித்து தஞ்சம் கொடுக்கிறார்கள் சாதாரண மக்களை தவறுசெய்தால் கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் கோடிஸ்வரர்கள், ஆளும்வர்க்கத்தினர் தவறு செய்தால் மட்டும் சட்டங்கள் மாறி விடுகின்றது.

இறைவனின் சட்டங்கள்

எல்லாம் வல்ல இறைவன் மனித குலத்திற்கு வழங்கிய மாபெரும் அருட்கொடையான குர்ஆன் கூறும் சட்டங்கள் மற்றும் அவன் தன்னுடைய தூதர்கள் மூலமாக அனுமதிக்க பட்டவைகளையும்,தடைசெய்யப்பட்டவைகளையும் அந்த சட்டங்களின் பயன்களையும் மகத்துவத்தையும் எளிய முறையில் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுட்ட்றோம்;கட்டுப்பட்டோம்”என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெறுவார்கள். (அல்குரான் 24:51 )

ஏகனாகிய இறய்வனுக்கு மட்டுமே உலகத்தின் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் முகமாகவும்,அனைவரும் எளியமுறையில் கடைப்பிடிக்ககூடிய வகையிலும் ஒரே சட்டத்தை பிறப்பிக்க கூடிய தகுதியும்,அதிகாரமும், ஞானமும் உள்ளது.இது விஷயத்தில் மனிதன் இறைவனிடம் சரணடைந்தே ஆக வேண்டும்.இதை ஒரு சவாலாகவே கூறலாம்.

இறைவனுடைய சட்டங்கள் அருளப்பெற்று 1400 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் அச்சட்டங்களை பின்பற்றி வருகிறோம் இது வரையிலும் ஒரு குறையேனும் கண்டுபிடிக்க இயலவில்லை.மேலும் யுக முடிவு நாள் வரையும் கூட இச்சட்டங்களைத்தான் பின்பற்றவும் போகிறோம் அனால் மனித சட்டங்கள் நூற்றாண்டுகளைகூட தாண்ட முடியாமல் திண்டாடுகிறதை கண்கூடாக காணலாம்.
.
ஒரு நாட்டிற்கே ஆயிரக்கணக்கான பக்கங்களில் அந்த நாட்டின் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளின் சட்ட புத்தகங்களை தொகுத்தால் அதை படித்தாலே ஆயிசு முடிந்துவிடும் எனும்போது எவ்வாறு பின்பற்றுவது.ஆனால் உலக நாடுகள் அனைத்திற்கும் குர்ஆன் பொதுவான சட்டமாகவும் முழுமையானதாகவும் விளங்குகிறது.ஒரு நாட்டின் சட்டத்தை கலங்கரை விளக்கமாகவும் குர்ஆனை உலகமனைத்திற்கும் ஒளி கொடுக்கும் சூரியனையோ சந்திரனையோ ஒப்பிட்டு கூறலாம்.

அடுத்ததாக மக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க தேடி போகும் போலி ஆன்மீகவாதிகள் மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி பெண்களின் கற்பை சூரையாடுவதையும் ,சொத்துக்களை அபகரிப்பதையும் கண் கூடாக காண்கிறோம். இதை தீர்க்க இதனால் வரை ஒரு தீர்வை உலக சட்டங்களால் தீர்வு சொல்ல முடிந்ததா? ஆனால் இறைவன் தனது ஒரே சட்டத்தின் மூலம் இதை தவிடுபொடியாக்குகிறான்.

“அல்லாஹ் ஒருவன் “என (முஹம்மதே !) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன் (யாரையும்) அவன் பெறவில்லை.பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குரான் 112:1,2,3,4)

இறைவனின் சட்டத்தில் மட்டுமே பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.இதற்க்கு ஆதாரமாக பின் வரும் ஹதீஸை குறிப்பிடுகிறோம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.(புஹாரி 6788)

நம்மை படைத்த இறைவனிடமிருந்தே தவிர வேறு யாராலும் இப்படி கூறியிருக்க முடியாது.
“இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை” என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.
கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.பாதிக்கப் பட்டவர்களின் பார்வையில் இருந்து தான் குற்றத்தை எதிர்கொள்ள வேண்டுமே தவிர குளிர் சாதன அறையில் இருந்துக் கொண்டு சட்டம் இயற்றுபவருக்கு பாதிக்கப் பட்டவரின் உணர்வு தெரிவதற்கு வாய்ப்பில்லை.
குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)
ஆகையால் இதன்மூலம் நாம் கூறவருவது இறைவன் நமது சக்திக்கு மீறி சிரமப்படுத்துவதில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும், மேலும் மனிதனின் சட்டங்களை விட நம்மை படைத்த இறைவனின் சட்டங்கள் தான் நம்மை இம்மையிலும் நிலையான மறுமையிலும் வெற்றிபெற உதவும் என்பதை மனதில் கொண்டு எந்த காரியம் செய்தாலும் மார்க்கம்அனுமதித்துள்ளதா என்று ஆராய்ந்து இறைவனுக்காக மட்டுமே பின்பற்றி வெற்றிபெற வேண்டும் .

– ஆசிரியர் : முஹமது இன்சாஃப்(FRTJ செயலாளர்)
– இந்த கட்டுரைக்கு உதவியாக Onlinepj.com இணையதளத்தை பயன்படுத்தியுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.