ரமளான்

ரமளான்

உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து  விட்டது .

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும.;நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான ். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும் நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது (2:185).
நாம் பதினோரு மாதங்கள் செய்யும் பாவங்களை அழித்து நன்மையின் பக்கம் நம்மை அழைக்கும் மாதம் இந்த ரமழான்.

முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப் படும் மாதம்.
ரமழான் மாதத்தில் நம்மிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்றால் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப் படும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901) முஸ்லிம் (1393)

அருள் வாயல்கள் திறக்கப் படும் மாதம்.

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956)

ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899),முஸ்லிம் (1957)

நம்மை பாவங்களில் இருந்து காப்பாற்றி நன்மையை மாத்திரம் செய்வதற்று இந்த மாதம் தூண்டுவதால் தான் இந்த செய்திகளை நபியவர்கள் சொல்கிறார்கள்.

சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விளங்கிடப் படும் மாதம் இது இந்த மாதத்தில் அதிகமாக நன்மைகளை செய்வதில் நாம் அதிகம் கவணம் செலுத்த வேண்டும்.

அதிக நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) , நுல்: முஸ்லிம் (2119)

ரமழான் மாத நோன்பு எனக்குறியது அதற்கு நனே கூலி கொடுக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான் இந்த மாத்த்தில் நாம் தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.

யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
உம்ரா செய்தால் ஹஜ் நன்மை.

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்.

சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு �® �வரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) 

நூல்: புகாரீ (1896) முஸ்லிம் (2121)

இறைவனுக்கு மிக விருப்பமான வணக்கம்.

நோன்பு இறைவன் மனிதனுக்கு கட்டளையிட்ட வணக்கங்களிலேயே மிகவும் விருப்பமானதாகும்.

நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நுல்: புகாரீ (1894)

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். 

(அல்குர்ஆன் 97:1-5)

எனவே இந்த ரமழானை நாம் சுவர்க்கம் செல்லும் வழியாக அமைத்துக் கொள்ள முயல்வோமாக. 
நன்றி ரஸ்மின் .misc (sltj)         
அனுப்பியவர் அமீன் ஆஷிக் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.