இறைவனின் திருப்பெயரால்…,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அல்லாஹ்வின் அருளால் 18-05-2014 அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” 9 வது முறையாக நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ யின் உதவித் தலைவர் சகோதரர் முஹம்மது இன்சாப் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள் . பின்பு FRTJ யின் தலைவர் சகோதரர் முஹம்மது ருக்னுதீன் தலைமையுரையாற்றினார்கள்.
அதற்கு பிறகு TNTJ மாநில தலைவர் சகோ P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் நம் கொள்கை சகோதர, சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அழகான முறையில் பதில் அளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் வரும் காலங்களில் TNTJ வின் தேர்தல் நிலைப்பாடு ,சூனியம் போன்ற பல கேள்விகள் கேட்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் 90 க்கு மேற்பட்ட சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ” நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்லாஹ் அக்பர். இறுதியாக FRTJ யின் பொருளாளர் சகோதரர்
அப்துல் ஹக்கீம் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
‘துஆக்கள்’ என்ற கையேடு அனைவருக்கும் இலவசமாக கொடுக்கப் பட்டது.