தஸ்பீஹ்தொழுகை ஓர் ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு75தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில்300தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி யாராவதுஇட்டுக்கட்டி சொல்லி இருப்பார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால்,அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அது போன்ற செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதி அதை விட்டு . தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவை என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.
 சில அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளன. ஆயினும் சில ஹதீஸ்கள் மட்டும் ஏற்கத் தக்கதாக உள்ளன என்று கூறுகின்றனர்.
தஸ்பீஹ் தொழுகை தொடர்பான கீழ்க்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமனவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்து கூறுகின்றனர். அதாவது கீழ்க்காணும் ஹதீஸ்கள் பலவீனமானைவை என்பதை இரு சாராரும் ஒப்புக் கொள்வதால் இது குறித்து ஆய்வு தேவை இல்லை. மேலோட்டமாக அறிந்து கொண்டாலே போதுமானது.
அபூ ராஃபிவு (ரலி) அறிவிக்கும் செய்தி
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ الْعُكْلِيُّ حَدَّثَنَامُوسَى بْنُ عُبَيْدَةَحَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ
 بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ أَبِي رَافِعٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ يَا عَمِّ أَلَا أَصِلُكَ أَلَا أَحْبُوكَ أَلَا أَنْفَعُكَ قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ يَا عَمِّ صَلِّ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ فَإِذَا انْقَضَتْ الْقِرَاءَةُ فَقُلْ اللَّهُ أَكْبَرُ وَالْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً قَبْلَ أَنْ تَرْكَعَ ثُمَّ ارْكَعْ فَقُلْهَا عَشْرًا ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا ثُمَّ اسْجُدْ فَقُلْهَا عَشْرًا ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا ثُمَّ اسْجُدْ الثَّانِيَةَ فَقُلْهَا عَشْرًا ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا قَبْلَ أَنْ تَقُومَ فَتِلْكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ هِيَ ثَلَاثُ مِائَةٍ فِي أَرْبَعِ رَكَعَاتٍ فَلَوْ كَانَتْ ذُنُوبُكَ مِثْلَ رَمْلِ عَالِجٍ لَغَفَرَهَا اللَّهُ لَكَ قَالَ يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَقُولَهَا فِي كُلِّ يَوْمٍ قَالَ فَإِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تَقُولَهَا فِي كُلِّ يَوْمٍ فَقُلْهَا فِي جُمْعَةٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تَقُولَهَا فِي جُمُعَةٍ فَقُلْهَا فِي شَهْرٍ فَلَمْ يَزَلْ يَقُولُ لَهُ حَتَّى قَالَ فَقُلْهَا فِي سَنَةٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي رَافِعٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) யை நோக்கி, என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்! ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15தடவை கூறுவீராக! பின்னர் ருகூவு செய்து அதில் 10தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10தடவை கூறுவீராக. பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் 10தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை அதனைக் கூறுவீராக! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள் வீதம் நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! ஒரு வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக! இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி)
நூல் திர்மிதீ (444)
இந்தச் செய்திஇப்னுமாஜா (1376),பைஹகீ (அஸ்ஸுனுஸ் ஸுக்ரா)தப்ரானீ (அல்முஃஜமுல் கபீர்) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில்அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெறுகிறார்.
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிஞர்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் மூஸா பின் உபைதா பலவீனமானவர் என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர்.எனவே மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
حدثنا محمد بن سفيان الأبلي حدثنا حبان بن هلال أبو حبيب حدثنا مهدي بن ميمون حدثناعمرو بن مالكعن أبي الجوزاء قال حدثني رجل كانت له صحبة يرون أنه عبد الله بن عمرو قال قال لي النبي صلى الله عليه وسلم ائتني غدا أحبوك وأثيبك وأعطيك حتى ظننت أنه يعطيني عطية قال إذا زال النهار فقم فصل أربع ركعات فذكر نحوه قال ثم ترفع رأسك يعني من السجدة الثانية فاستو جالسا ولا تقم حتى تسبح عشرا وتحمد عشرا وتكبر عشرا وتهلل عشرا ثم تصنع ذلك في الأربع الركعات قال فإنك لو كنت أعظم أهل الأرض ذنبا غفر لك بذلك قلت فإن لم أستطع أن أصليها تلك الساعة قال صلها من الليل والنهار قال أبو داود حبان بن هلال خال هلال الرأي قال أبو داود رواه المستمر بن الريان عن أبي الجوزاء عن عبد الله بن عمرو موقوفا ورواه روح بن المسيب وجعفر بن سليمان عن عمرو بن مالك النكري عن أبي الجوزاء عن ابن عباس قوله وقال في حديث روح فقال حديث عن النبي صلى الله عليه وسلم حدثنا أبو توبة الربيع بن نافع حدثنا محمد بن مهاجر عن عروة بن رويم حدثني الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال لجعفر بهذا الحديث فذكر نحوهم قال في السجدة الثانية من الركعة الأولى كما قال في حديث مهدي بن ميمون
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்; உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன். (அப்போது) பகல் சாயும் போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10தடவை, அல்ஹம்து லில்லாஹ் 10தடவை, அல்லாஹு அக்பர் 10தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப் பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்தால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு பகலில் அல்லது இரவில் ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் (1105)
இந்தச்செய்தி பைஹகீ என்ற நூலிலும் (எண்4698) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் மாலிக் என்பவர் பலவீனமானவர். இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. தஸ்பீஹ் தொழுகையை ஆதரிக்கும் அறிஞர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஜஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
مصنف عبد الرزاق – (ج 3 / ص 123)
5004 -عبد الرزاق عن داود بن قيس عن إسماعيل بن رافع عن جعفر بن أبي طالب أن النبي صلى الله عليه و سلم قال له ألا أهب لك ألا أمنحك ألا أحذوك ألا أوثرك ألا ألا حتى ظننت أنه سيقطع لي ماء البحرين قال تصلي أربع ركعات تقرأ أم القرآن في كل ركعة وسورة ثم تقول الحمد لله وسبحان الله والله أكبر ولا إله إلا الله فعدها واحدة حتى تعد خمس عشرة مرة ثم تركع فتقولها عشرا وأنت راكع ثم ترفع فتقولها عشرا وأنت رافع ثم تسجد فتقولها عشرا وأنت ساجد ثم ترفع فتقولها عشرا وأنت جالس ثم تسجد فتقولها عشرا وأنت ساجد ثم ترفع فتقولها عشرا وأنت جالس فتلك خمس وسبعون وفي الثلاث الأواخر كذلك فذلك ثلاث مائة مجموعة وإذا فرقتها كانت ألفا ومائتين وكان يستحب أن يقرأ السورة التي بعد أم القرآن عشرين آية فصاعدا تصنعهن في يومك أو ليلتك أو جمعتك أو في شهر أو في سنة أو في عمرك فلو كانت ذنوبك عدد نجوم السماء أو عدد [ ص 124 ] القطر أو عدد رمل عالج أو عدد أيام الدهر لغفرها الله لك
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டின் செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன். நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹ் வஸுப்ஹானல்லாஹ் வல்லாஹு அக்பர் வலாயிலாஹ இல்லல்லாஹு இதை 15தடவை கணக்கிட்டு (ஓதிக்) கொள். பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10தடவை கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் தலை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10தடவை கூறு!. இவை மொத்தம் 75தடவையாகும். இதைப் போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2.ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4.லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் மொத்தம் 1200ஆகும். பாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை பகல் அல்லது இரவில் அல்லது வாரத்தில் ஒரு நாள், அல்லது மாத்தில் ஒரு நாள், வருடத்தில் ஒரு நாள் அல்லது வாழ் நாளில் ஒரு நாள் தொழு! (அவ்வாறு தொழுதால்) உனது பாவங்கள், வானத்தின் நட்சத்திரம் அளவிற்கு அல்லது மழைத் துளிகள் அளவிற்கு அல்லது அதிகமான மணல் அளவிற்கு அல்லது காலத்தின் நாட்கள் அளவிற்கு இருந்தாலும் அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பான்.
அறிவிப்பவர்: ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி)
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (5004)
இந்த ஹதீஸின் முதல் அறிவிப்பாளரான ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே ஹிஜ்ரீ 8ஆம்ஆண்டு நடந்த மூத்தா போரில் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். (பார்க்க புகாரீ ஹதீஸ் எண்4260, 4261மற்றும் பத்ஹுல் பாரீ)
ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக ஒருவர் அறிவிப்பதானால் அவர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது நபித்தோழராக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பே ஜஃபர் மரணித்து விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிந்தியவர் ஜஃபரைப் பார்த்திருக்கவோ ஜஃபரிடமிருந்து கேட்டிருக்கவோ முடியாது.
ஆனால் இந்த ஹதீஸை ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) கூறியதாக அறிவிப்பவர் இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவராவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர் அல்லர்.
மேலும் இவர் பலவீனமானவரும் கூட. அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூ ஹாத்தம் ராஸீ, அப்துல்லாஹ் பின் முபாரக் உள்ளிட்ட அறிஞர்கள் இவரைப் பலவீனர் என்று கூறியுள்ளனர். இவ்வாறு இரண்டு பலவீனங்கள் உள்ளதால் இந்த ஹதீஸும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.
இந்த ஹதீஸ்கள் பலவீனமானவை என்று தஸ்பீஹ் தொழுகையை ஆதரிப்பவர்களும் ஒப்புக் கொள்வதால் இவற்றை ஆதாரமாகக் காட்டி தஸ்பீஹ் தொழுகையை நியாயப்படுத்த முடியாது.
கீழ்க்காணும் ஹதீஸ்களைத் தான் ஆதாரபூர்வமானது எனக் கூறி தஸ்பீஹ் தொழுகையை நியாயப்படுத்துகின்றனர். எனவே இவற்றைக் குறித்துத் தான் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ غَدَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ عَلِّمْنِي كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي صَلَاتِي فَقَالَ كَبِّرِي اللَّهَ عَشْرًا وَسَبِّحِي اللَّهَ عَشْرًا وَاحْمَدِيهِ عَشْرًا ثُمَّ سَلِي مَا شِئْتِ يَقُولُ نَعَمْ نَعَمْ قَالَ وَفِي الْبَاب عَنْ ابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَأَبِي رَافِعٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ حَدِيثٍ فِي صَلَاةِ التَّسْبِيحِ وَلَا يَصِحُّ مِنْهُ كَبِيرُ شَيْءٍ
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். தொழுகையில் நான் ஓதுவதற்குச் சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்! என்றார்கள். நான் சரி! சரி! என்றேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: திர்மிதீ (443)
இதே செய்தி ஹாகிம்1191, நஸயீ1282, அஹ்மத்11762 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இதற்கும் தஸ்பீஹ் தொழுகைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இதை விளங்கிக் கொள்ளலாம்.
தஸ்பீஹ் தொழுகைக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்றாலும் இதை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக சிலர் ஏன் எடுத்துக் காட்டுகிறார்கள் என்றால் இமாம் திர்மிதீ அவர்கள் இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் பதிவு செய்திருப்பதால் தான்.
இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற தலைப்பில் இமாம் திர்மிதீ கொண்டு வந்துள்ளதை இமாம் இராகீ அவர்கள் ஆட்சேபணை செய்துள்ளார்கள். இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் கொண்டு வந்திருப்பது ஆட்சேபணைக்குரியதாகும். ஏனெனில் இது ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு தஸ்பீஹ் சொல்லுவது தொடர்பாக வந்த செய்தியாகும் என ஹாஃபிழ் இராக்கீ கூறுகிறார்கள் (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)
இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் அந்த ஹதீஸின்படி தஸ்பீஹ்களை கூறுவதில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்ட முடியாது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
المستدرك على الصحيحين ج1/ص464
حدثناه أبو علي الحسين بن علي الحافظ إملاء من أصل كتابه ثنا أحمد بن داود بن عبد الغفار بمصر ثنا إسحاق بن كامل ثنا إدريس بن يحيى عن حيوة بن شريح عن يزيد بن أبي حبيب عن نافع عن بن عمر قال وجه رسول الله صلى الله عليه وسلم جعفر بن أبي طالب إلى بلاد الحبشة فلما قدم اعتنقه وقبل بين عينيه ثم قال ألا أهب لك ألا أبشرك ألا أمنحك ألا أتحفك قال نعم يا رسول الله قال تصلي أربع ركعات تقرأ في كل ركعة بالحمد وسورة ثم تقول بعد القراءة وأنت قائم قبل الركوع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله خمس عشرة مرة ثم تركع فتقولهن عشرا تمام هذه الركعة قبل أن تبتدئ بالركعة الثانية تفعل في الثلاث ركعات كما وصفت لك حتى تتم أربع ركعات هذا إسناد صحيح لا غبار عليه ومما يستدل به على صحة هذا الحديث استعمال الأئمة من أتباع التابعين إلى عصرنا هذا إياه ومواظبتهم عليه وتعليمهن الناس منهم عبد الله بن المبارك رحمة الله عليه
நபி (ஸல்) அவர்கள்,ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நீ நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ். வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15தடவை கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10தடவை கூறு! பின்னர் ருகூவில் இருந்து எழுந்து அதை 10தடவை கூறு! இரண்டாம் ரக்அத்தைத் துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: ஹாகிம் (1196)
தஸ்பீஹ் தொழுகையை ஆதரிப்பவர்கள் இதை முக்கியமான ஆதாரமாக முன் வைப்பார்கள். ஏனெனில் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் ஹாகிம் அவர்கள் இது ஆதாரப்பூர்வமானது; இதன் மீது எந்தப் புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஹாகிம் அவர்களின் நூலின் அறிவிப்பாளர் தொடரை மேலாய்வு செய்யும் இமாம் தஹபீ அவர்களும் ஹாகிம் கூற்றை வழி மொழிகிறார். எனவே இது ஆதாரப்பூர்வமானது என்று தஸ்பீஹ் தொழுகையை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.
ஹாகிம் அவர்களும் தஹபீ அவர்களும் கூறுவது கவனக் குறைவால் ஏற்பட்ட முடிவாகும்.
இச்செய்தியில் ஏழாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பார் பெரும் பொய்யரும் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறுபவருமாவார்.
இந்த ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்துள்ள தஹபீ அவர்களே தமது மீஸானுல் இஃதிதால் எனும் நூலில் இமாம் தாரகுத்னீ, மற்றும் சில அறிஞர்கள் இவரைப் பொய்யர் என்று கூறியுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்கள். அதை மறந்து விட்டு இந்த ஹதீஸ் சரியானது என்கிறார்.
ميزان الاعتدال – الذهبي – (ج 1 / ص 96)
370 -أحمد بن داود بن عبد الغفار، أبو صالح الحرانى ثم المصرى.كذبه الدارقطني وغيره.ومن أكاذيبه: روى عن أبى مصعب، عن مالك، عن نافع، عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: مفتاح الجنة المساكين، والفقراء هم جلساء الله.وحدث عن أبى مصعب، عن مالك، عن جعفر، عن آبائه بحديث آخر كذبوله عن أبى مصعب، عن مالك، عن يحيى بن سعيد، عن عروة، عن عائشة، عنرسول الله صلى الله عليه وسلم: وجبت محبة الله على من أغضب فحلم.وهذا موضوع.
(நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்1,பக்கம்232)
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள்,அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள். அஹ்மத் பின் தாவூத்என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர்.
تلخيص الحبير – ابن حجر – (ج 4 / ص 96)
ورواه الحاكم من حديث بن عمر وفيه أحمد بن داود الحراني وهو ضعيف جدا اتهموه بالكذب وعن أبي جحيفة قال قدم جعفر من أرض الحبشة فقبل النبي صلى الله عليه و سلم ما بين عينيه الحديث بطوله رواه الطبراني
(நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்4,பக்கம்96)
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் அஹ்மத் பின் தாவூத் என்பவரைப் பற்றி தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில்இவ்வாறு கூறுகிறார்கள்.
لسان الميزان – ابن حجر – (ج 1 / ص 368)
وأخرج الحاكم في المستدرك من طريق أحمد بن داود الحراني عن إسحاق بن كامل عن إدريس بن يحيى عن حيوة بن شريح عن يزيد بن أبي حبيب عن نافع عن بن عمر رضي الله عنهما حديث صلاة التسبيح وتعليمه لجعفر بن أبي طالب وقال صحيح لا غبار عليه وتعقبه شيخنا في ذيله بل هو مظلم لا نور عليه وأحمد بن داود كذبه الدارقطني
ஜஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்களுக்கு தஸ்பீஹ் தொழுகையைக் கற்றுக் கொடுத்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை (இமாம் ஹாகிம் அவர்கள்) ஆதாரப்பூர்வமானது,அதன் மீது எந்த (பலவீனம் என்ற) புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது இருள் நிறைந்ததாகும். ஒளியுடையது அல்ல. (இதில் இடம் பெறும்) அஹ்மத் பின் தாவூத் என்பவரை இமாம் தாரகுத்னீ பெரும் பொய்யர் என்று விமர்சித்துள்ளார் என்று அந்நூலின் ஓர உரையில் எங்கள் ஆசிரியர்கள் அதை விமர்சனம் செய்துள்ளனர்.
(நூல்: லிஸானுல் மீஸான் பாகம்1, பக்கம்368) எனவே தஸ்பீஹ் தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி
حدثنا عبد الرحمن بن بشر بن الحكم النيسابوري حدثناموسى بن عبد العزيزحدثنا الحكم بن أبان عن عكرمة عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال للعباس بن عبد المطلب يا عباس يا عماه ألا أعطيك ألا أمنحك ألا أحبوك ألا أفعل بك عشر خصال إذا أنت فعلت ذلك غفر الله لك ذنبك أوله وآخره قديمه وحديثه خطأه وعمده صغيره وكبيره سره وعلانيته عشر خصال أن تصلي أربع ركعات تقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة فإذا فرغت من القراءة في أول ركعة وأنت قائم قلت سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر خمس عشرة مرة ثم تركع فتقولها وأنت راكع عشرا ثم ترفع رأسك من الركوع فتقولها عشرا ثم تهوي ساجدا فتقولها وأنت ساجد عشرا ثم ترفع رأسك من السجود فتقولها عشرا ثم تسجد فتقولها عشرا ثم ترفع رأسك فتقولها عشرا فذلك خمس وسبعون في كل ركعة تفعل ذلك في أربع ركعات إن استطعت أن تصليها في كل يوم مرة فافعل فإن لم تفعل ففي كل جمعة مرة فإن لم تفعل ففي كل شهر مرة فإن لم تفعل ففي كل سنة مرة فإن لم تفعل ففي عمرك مرة حدثنا محمد بن سفيان الأبلي حدثنا حبان بن هلال أبو حبيب حدثنا مهدي بن ميمون حدثنا عمرو بن مالك عن أبي الجوزاء قال حدثني رجل كانت له صحبة يرون أنه عبد الله بن عمرو قال قال لي النبي صلى الله عليه وسلم ائتني غدا أحبوك وأثيبك وأعطيك حتى ظننت أنه يعطيني عطية قال إذا زال النهار فقم فصل أربع ركعات فذكر نحوه قال ثم ترفع رأسك يعني من السجدة الثانية فاستو جالسا ولا تقم حتى تسبح عشرا وتحمد عشرا وتكبر عشرا وتهلل عشرا ثم تصنع ذلك في الأربع الركعات قال فإنك لو كنت أعظم أهل الأرض ذنبا غفر لك بذلك قلت فإن لم أستطع أن أصليها تلك الساعة قال صلها من الليل والنهار قال أبو داود حبان بن هلال خال هلال الرأي قال أبو داود رواه المستمر بن الريان عن أبي الجوزاء عن عبد الله بن عمرو موقوفا ورواه روح بن المسيب وجعفر بن سليمان عن عمرو بن مالك النكري عن أبي الجوزاء عن ابن عباس قوله وقال في حديث روح فقال حديث عن النبي صلى الله عليه وسلم حدثنا أبو توبة الربيع بن نافع حدثنا محمد بن مهاجر عن عروة بن رويم حدثني الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال لجعفر بهذا الحديث فذكر نحوهم قال في السجدة الثانية من الركعة الأولى كما قال في حديث مهدي بن ميمون
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாஸே! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்குப் பத்து விஷயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும், புதிய பாவங்களையும், பழைய பாவங்களையும், வேண்டுமென்றே செய்த பாவங்களையும், தவறுதலாகச் செய்த பாவங்களையும், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் இந்தப் பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹ வல்லாஹு அக்பர் என்று 15தடவை கூறுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை10தடவை சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10தடவை அந்த தஸ்பீஹை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தாச் செய்த நிலையில்10தடவை அந்த தஸ்பீஹை செய்யுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாச் செய்து அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். இதுஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்)75ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ்நாளில் ஒரு முறை செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் அபூதாவூத் (1105)
இந்த ஹதீஸ் தான் தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்பவர்கள் வலிமையான ஆதாரமாகக் காட்டக்கூடிய செய்தியாகும். இந்தச் செய்தியின் தரம் என்ன? ஹதீஸ் கலை அறிஞர்கள் இச்செய்தி தொடர்பாக என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் ஏராளமாக வந்துள்ளன. அதில் சரியானது இக்ரிமா வழியில் வந்துள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும் என்று ஹாபிழ் முன்திர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ)
இக்ரிமா,இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர் தொடரைப் போன்று அழகிய தொடர்,தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வேறு எதிலும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகிறார்கள்.
(துஹ்பத்துல் அஹ்வதீ)
இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் இச்செய்தியில் இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று விமர்சித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை இட்டுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று சொல்லும் இப்னுல் ஜவ்ஸீன் கூற்று தவறானதாகும். ஏனெனில் இமாம் நஸயீ, இப்னுமயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று பதிலளிக்கிறார்கள்.
(துஹ்பத்துல் அஹ்வதீ)
இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது என்று மேற்கண்ட அறிஞர்கள் கூறி இருந்தாலும் மற்றும் பல அறிஞர்கள் தக்க காரணங்களுடன் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
ميزان الاعتدال – الذهبي – (ج 4 / ص 212)
8893 -موسى بن عبد العزيز [ د، ق ] العدنى، أبو شعيب القنبارى (2) ما أعلمه روى عن غير الحكم بن أبان، فذكر حديث صلاة التسبيح.روى عنه بشر بن الحكم، وابنه عبدالرحمن بن بشر، وإسحاق بن أبى إسرائيل،وغيرهم.ولم يذكره أحد في كتب الضعفاء أبدا، ولكن ما هو بالحجة قال ابن معين: لا أرى به بأسا.وقال النسائي: ليس به بأس.وقال ابن حبان: ربما أخطأ.وقال أبو الفضل السليمانى: منكر الحديث.وقال ابن المدينى: ضعيف.قلت: حديثه من المنكرات لاسيما والحكم بن أبان ليس أيضا بالثبت.وله خبر آخر بالاسناد في القول إذا سمع الرعد – مروى في الادب للبخاري.
பலவீனமானவர்கள் பட்டியலில் இவரை ஒருவரும் குறிப்பிடவில்லை. ஆனால் இவர் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவர் அல்லர். இவரிடம் நான் எந்தக் குறையும் காணவில்லை என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். இவர் சில நேரத்தில் தவறாக அறிவிப்பவர் என்று ஹாகிம் கூறுகிறார்
இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று அபுல் ஃபழ்ல் அவர்கள் கூறுகிறார்கள்.
இப்னுல் மதீனீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள். (இமாம் தஹபீ) நான் கூறுகிறேன், இவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்படுவைகளில் உள்ளதாகும். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலம் அறிவிப்பவை. (இச்செய்தியை அவர் அல்ஹகம் பின் அபான் மூலமே அறிவித்துள்ளார்.) மேலும் அவரும் (அல்ஹகம் பின் அபான் என்பவரும்) உறுதியானவர் இல்லை.
(நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம்6,பக்கம்550)
تقريب التهذيب : ابن حجر – (ج 2 / ص 552)
6988-موسى ابن عبد العزيز العدني أبو شعيب القنباري بكسر القاف وسكون النون ثم موحدة والقنبار حبال الليف صدوق سيء الحفظ من الثامنة مات سنة خمس وسبعين ر د س
மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கேளாறு உள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள்.
(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம்1,பக்கம்552)
தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக இவ்வாறு பல விதமான விமர்சனங்களைக் குறிப்பிடும் ஹாபிழ் இப்னு ஹஜர் இறுதியாக இவ்வாறு கூறுகிறார்கள்.
تلخيص الحبير – ابن حجر – (ج 2 / ص 7)
وأما صلاة التسبيح فرواه أبو داود والترمذي وابن ماجة وابن خزيمة كلهم عن عبد الرحمن بن بشر بن الحكم عن موسى بن عبد العزيز عن الحكم بن أبان عن عكرمة عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم للعباس يا عباس يا عماه ألا أمنحك ألا أحبوك الحديث بطوله وصححه أبو علي بن السكن والحاكم وادعى أن النسائي أخرجه في صحيحه عن عبد الرحمن بن بشر قال وتابعه إسحاق بن أبي إسرائيل عن موسى وأن بن خزيمة ورآه عن محمد بن يحيى عن إبراهيم بن الحكم بن أبان عن أبيه مرسلا وإبراهيم ضعيف قال المنذري وفي الباب عن أنس وأبي رافع وعبد الله بن عمر وغيرهم وأمثلها حديث بن عباس قلت وفيه عن الفضل بن عباس فحديث أبي رافع رواه الترمذي وحديث عبد الله بن عمرو رواه الحاكم وسنده ضعيف وحديث أنس رواه الترمدي أيضا وفيه نظر لأن لفظه لا يناسب ألفاظ صلاة التسبيح وقد تكلم عليه شيخنا في شرح الترمذي وحديث الفضل بن العباس ذكره الترمذي وحديث عبد الله بن عمرو بن العاص رواه أبو داود قال الدارقطني أصح شيء في فضائل سور القرآن قل هو الله أحد وأصح شيء في فضل الصلاة صلاة التسبيح وقال أبو جعفر العقيلي ليس في صلاة التسبيح حديث يثبت وقال أبو بكر بن العربي ليس فيها حديث صحيح ولا حسن وبالغ بن الجوزي فذكره في الموضوعات وصنف أبو موسى المديني جزءا في تصحيحه فتباينا والحق أن طرقه كلها ضعيفة وإن كان حديث بن عباس يقرب من شرط الحسن إلا أنه شاذ لشدة الفردية فيه وعدم المتابع والشاهد من وجه معتبر ومخالفة هيئتها لهيئة باقي الصلوات وموسى بن عبد العزيز وإن كان صادقا صالحا فلا يحتمل منه هذا التفرد وقد ضعفها بن تيمية والمزي وتوقف الذهبي حكاه بن عبد الهادي عنهم في أحكامه وقد اختلف كلام الشيخ محيي الدين فوهاها في شرح المهذب فقال حديثها ضعيف وفي استحبابها عندي نظر لأن فيها تغييرا لهيئة الصلاة
தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவையாகும் என்பதே உண்மையான கருத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ், ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷாத் ஆகும் (நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது) இந்தச் செய்தியில் கடுமையான தனிக் கருத்துக்கள் இருப்பதாலும் இதனை வலுப்படுத்தும் வகையில் சான்றுகளும் மற்ற அறிவிப்புகளும் இல்லாததாலும் மற்ற தொழுகையின் முறைக்கு மாற்றமாகவும் இதன் முறை இருப்பதாலும் (இச்செய்தி பலவீனம் அடைகிறது)
மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருந்தாலும் இவர் தனித்து அறிவிக்கும் இச்செய்தியை ஏற்க முடியாது. இவரை இப்னு தைமிய்யா, மிஸ்ஸி ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்:தல்கீஸுல் ஹபீர், பாகம்2, பக்கம்8)
ஒட்டு மொத்தமாக இந்த விமர்சனங்களைக் கவனிக்கும் போது மூஸா பின் அப்துல் அஸீஸ் நல்லவர் என்றாலும் அவரிடம் நினைவாற்றல் குறைவு உள்ளது. சில நேரங்களில் இவர் தவறாக அறிவித்து விடுவார். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் வழியாக அறிவிக்கும் செய்திகளில் இந்தக் குறைபாடு இருக்கிறது என்று அறிந்து கொள்கிறோம். ஒரு அறிவிப்பளாரைப் பற்றி குறையாகவும் நிறையாகவும் விமர்சனம் வந்து, அந்தக் குறை தக்க காரணத்துடனும் இருந்தால் குறை கூறும் விமரசனத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியின் அடிப்படையில் இது பலவீனமான செய்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகை போல் இல்லாமல் பல முறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது அதை நடைமுறைப்படுத்த சரியான, ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்தக் குறையும் இல்லாத செய்திகள் இல்லை. பல அறிவிப்புகள் இருந்தாலும் அனைத்திலும் குறைகள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் பல அறிவிப்புகள் தஸ்பீஹின் எண்ணிக்கை பற்றியும் அதைச் சொல்ல வேண்டிய இடங்கள் பற்றியும் மாற்றமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. எனவே தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் தொழுகை கிடையாது, அதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இல்லை என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவே சரியான கருத்தாகும்.
மற்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டாத இன்னொரு குறையும் இதில் காணப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களின் பேச்சு நடை உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஹதீஸின் மொழி நடை அந்தத் தரத்தில் அமையவில்லை.
என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா?
நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்;உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன்
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா?
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா?
தஸ்பீஹ் தொழுகை பற்றிய அனைத்து ஹதீஸ்களும் சொல்லி வைத்தது போல் இந்த நடை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாம் கூட ஒரு செய்தியை இது போல் கூற மாட்டோம். ஒரே செய்தியை பத்து வகையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கூறினால் அது மக்களுக்கு வெறுப்பாகத் தோன்றும். மிகச் சிறந்த சொல்லாற்றல் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்ற ஹதீஸ்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது அந்த நடையில் இருந்து வெகு தூரம் விலகியதாக் உள்ளதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
TNTJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.