தராவிஹ் தொழுகை சுன்னத்தா ?ஃபர்ளா ?வாஜிபா ?

கேள்வி : Assalamu allikkum zee tharvih thoulghai sunnathha ? and parla ? and vajeeba ?
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ ,தராவிஹ் தொழுகை சுன்னத்தா ?பர்ளா ?வாஜிபா ?
– Abdulrazak sharfudeen. U.A.E
பதில் : இரவுத் தொழுகை கட்டாயம் தொழ வேண்டும் என்ற சட்டம் இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் கடமையான தொழுகைக்கு அடுத்ததாக சிறப்பித்து சொல்லப்பட்ட, அதிக நன்மையைப் பெற்றுத்தரக் கூடிய தொழுகை இரவுத் தொழுகைதான்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரீ 990
ஆக இரவுத் தொழுகை ஒரு சுன்னத்தான தொழுகையாகும், தொழுதால் நிறைய நன்மைகளையும், சிறப்புக்களையும் பெற்றுத் தரும் தொழுகையாகும். கட்டாயமாக தொழவேண்டும் என்ற சட்டம் சொல்லப்படவில்லை.
மனிதனைப் பொருத்தவரையில் நிறைய பாவங்கள் செய்யக்கூடியவனாக இருப்பதினால், இது போன்ற தொழுகைகளை தொழுவதின் மூலம் நமது பாவங்களை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.
பதில் : ரஸ்மின்  MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.