புதிய முஸ்லீம்களை மேடையேற்றி கவுரவிக்களாமா?

கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை மேடையேற்றி கௌரவித்து விழாக்கள் நடத்த இஸ்லாம் அனுமதிக்கிறதா?

shaik shaik abdul rahman – india

பதில்ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது அவருடைய சுயவிருப்பத்தை பொருத்து நடக்கும் ஒரு செயல்பாடு. இஸ்லாம் தான் நேரான வழி என்று ஒருவர் அறிந்து கொண்டால் அவர் இஸ்லாத்தை தனது வழிமுறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை கவுரவித்து விழாக்கள் நடத்துவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எங்கும் வழிகாட்டுதல் கிடையாது. நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்கள் எவரையும் அவர்கள் மேடையேற்றி கவுரவப்படுத்தவுமில்லை, விழாக்கள் நடத்தவுமில்லை.

ஒருவருக்குறிய கவுரவம் என்பதே அவர் இஸ்லாத்தை ஏற்று அதன்படி நடப்பதுதானே தவிர அவருக்காக விழாக்கள் நடத்தி அவரை மேண்மைப்படுத்துவது அல்ல.

ஆக இப்படியான காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.