நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா?

கேள்விஅஸ்ஸலாமு அலைக்கும், எனது நண்பர் ஒருவர் தனது தாயாருடன் பல வருடங்களாக உறவில்லாமல் இருக்கிறார். அதற்க்கு காரணம் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததனால். அதாவது கணவர் இருக்கும் பொழுதே வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு பெரிய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். எந்த பிள்ளைகளும் அவரிடம் தொடர்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் பெற்றோரை கவனிக்காத குற்றம் வருமா? இதற்க்கு மார்க்கத்தில் தீர்வு என்ன?
ஜமிலா பிரான்ஸ் – france

பதில்இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எந்த மார்க்கத்திலும் இல்லாத அளவுக்கு பெற்றோரைப் பற்றிய வலியுறுத்தல்கள் மிகவும் அதிகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

பெற்றோருக்கு பணிவிடை செய்வதைப் பற்றி இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துவதற்கான அடிப்படைக் காரணமே அவர்கள் நம்மைப் பெற்றெடுத்ததுதான். இப்போது பிரச்சினைக்கு வருவோம், ஒரு தாய் கெட்ட நடத்தை உடையவளாக, அல்லது விபச்சாரியாக இருக்கிறாள் இப்படிப்பட்ட தாயை பிள்ளைகள் கவணிக்க வேண்டுமா? என்ற பிரச்சினை எழுகிறது.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் தாயோ தந்தையோ குற்றம் செய்தவர்கள் என்பதற்காக அவர்களை கவணிக்கக் கூடாது என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மாறாக பெற்றோர் எந்தக் குற்றத்தை செய்தாலும் அவர்களை கவணிப்பதற்கு அவர்களுக்குறிய காரியங்களை செய்வதற்கு அந்தக் குற்றங்கள் தடையாக இருக்காது.

ஏன் என்றால் ஒருவர் விபச்சாரம் செய்வதைவிட பாவமான காரியம் தான் இறைவனுக்கு இணைவைப்பது அப்படிப்பட்ட பாவத்தை செய்த பெற்றோருக்கே உபகாரம் செய்யும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.

என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள். நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். “ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)

மேற்கண்ட செய்தியில் இணைவைத்த தாய்க்கு உபகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இணை வைத்தருக்கே உபகாரம் செய்ய வேண்டும் என்றால் விபச்சாரம் மற்றும் கெட்ட நடத்தையுடைய தாய்க்கு உபகாரம் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14)

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)

உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)

ஆக உங்கள் நண்பர் கண்டிப்பாக அவருடைய தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்துதான் ஆகவேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இந்த பதிவுகளையும் பார்க்கவும் : 
பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.