கேள்வி : ஜும்மா தொழுகை ஃபர்லா அல்லது வாஜிபா அல்லது சுன்னத்தா?விளக்கம் தரவும்.
– sharfudeen UAE
அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(அல் குர்ஆன் 62:9)
‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்: அபூதாவூத் 901
ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 1. பருவ வயதை அடையாதவர்கள். 2. பெண்கள் 3. நோயாளி 4. பயணிகள். இந்த நான்கு பேர்களைத் தவிர மற்ற அனைவர் மீதும் ஜும்மா கட்டாயக் கடமையாகும்.
– பதில் : ரஸ்மின் MISc