அல்லாஹ்வின் அருளால் 25-01-2014 சனிக்கிழமை அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் FRTJ வின் மஷூரா மற்றும் பயான் நிகழ்ச்சி சகோதரர் முகம்மது இன்சாப் அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது.
தலைமை உரையை FRTJ யின் தலைவர் முகம்மது ருக்னுதீன் அவர்கள் ” தவ்ஹீத் என்றால் என்ன”? என்ற தலைப்பில் தெளிவாக விளக்கி உரையாற்றினார்கள்.
மேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரரர் உஸ்மான் அவர்கள் “இஸ்லாமும் தேடுதலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
ஆதரவற்ற சிறுவர் இல்லத்திற்கு யாரரெல்லாம் பொறுப்பு ஏற்று கொள்கின்றீர்கள் என்று ஆலோசனை கேட்கப்பட்டது.
FRTJ website பற்றியும் அதன் வேலைகள் மாற்றம் செய்வது பற்றியும் பேசப்பட்டது.
FRTJ யின் நிர்வாகிகள், மேலாண்மைகுழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் சகோதரர் முகம்மது இன்சாப் அவர்களை FRTJ யின் துணை தலைவராக அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.
புதியதாக இரு சகோதரர்கள் FRTJ யின் மசூரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள் மாஷா அல்லாஹ்.
புதியதாக கலந்து கொண்ட சகோதரர் அமர்தீன் அவர்களுடைய வீட்டில் 2 வது முறையாக பெண்களுக்கான பயான் நடத்தி தரும்படி கேட்டு கொண்டார்கள்.
விரைவில் cergy saint christophe பகுதியிலும் தாவா மற்றும் பயான் செய்ய முடிவெடுக்கப் பட்டது.
வரும் ஜனவரி 28 நடைபெற இருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்திற்க்காக துவா செய்து மசூரா இனிதே நிறைவுப்பெற்றது.