கேள்வி : ASSALAAMUALAIKUM {WARAHMATHULLAAH},ENNUDAIYA UMMA NAAM SIRIYA VAYATHIL IRUKKUM POTHAE SMALL KUDUMBA PERICHANAI KAARANAMAAG DIVERS AAGIVITTATHU,SO NAAN IPPOTHU EN UMMAUKKU PANIVIDAI SEYYA VENDUMAA?PLZ TELL ANSWER
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),என்னுடைய உம்மா நாம் சிறிய வயதில் இருக்கும் போதே சின்ன குடும்ப பிரட்சனை காரணமாக விவாகரத்து ஆகிவிட்டது.அதனால் நான் இப்போது என் உம்மாவுக்கு பணிவிடை செய்ய வேண்டுமா?பதில் தரவும்.
– ABDUL GHANI, UNITED ARAB EMIRATES
பதில் : இதே போன்ற ஒரு கேள்விக்கு ஏற்கனவே நமது தளத்தில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
தாய் தந்தையுடன் வாழ முடியாது என்று விவாகரத்து வாங்கிவிட்டு சென்றுவிட்டார்களே தவிர உங்களுக்கும் தாய்க்கும் உள்ள உறவு முறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீங்கள் அவர் மகன், அவர் உங்கள் தாய் என்பது அப்படியேதான் இருக்கும்.
தாய்க்கு கண்டிப்பாக நீங்கள் பணிவிடை செய்துதான் ஆகவேண்டும்.
பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருமறைக் குர்ஆனில் பல வசனங்களை நாம் பார்க்க முடியும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14)
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)
உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)
தாய் இணை கற்பித்தாலும் அவளுக்கும் நாம் பணிவிடை செய்தாக வேண்டும்.
என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள்.நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் அசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளடுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன்.”ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் பெற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் பணிவிடை செய்தாக வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு விளக்குகிறது.
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.
Strictly Necessary Cookies
Strictly Necessary Cookie should be enabled at all times so that we can save your preferences for cookie settings.
If you disable this cookie, we will not be able to save your preferences. This means that every time you visit this website you will need to enable or disable cookies again.