பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் மண்டல செயற்குழு கூட்டம் 25.06.11 அன்று மதியம் 3.00 மணிக்கு சகோதரர் துணைசெயலாளர் ருக்னுதீன் வீட்டில் நடைபெற்றது. FRTJ மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், தலைவர் அதீன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் அமர்வின் ஆரம்பத்தில் துணைத்தலைவர் ஹக்கீம் அவர்கள் தொடங்கிவைத்து பேசினார்.இதில் உறுப்பினர்கள் கருத்து கேட்டறியப்பட்டது. பிறகு இரண்டாவது அமர்வில் துணைசெயலாளர் ருக்னுதீன் செயல்பாடுகளைப் பற்றி பேசி ஆலோசனைக்குழு தேர்வை தொடங்கி வைத்தார். ஆலோசனை குழு தேர்வு நடைபெற்றது.பிறகு பொருளாளர் பஜ்ருள் ஹக் மூன்றாவது அமர்வில்தனது கருத்துகளை கூறி தொடங்கி வைத்தார்.
பிறகு TNTJ தலைமையின் நிதிச்சுமையை குறைக்க உதவுவது என்றும், உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்துவது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இறுதியாக FRTJ சார்பில் tntj வால் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கம் என்ற புத்தகம் french மொழியில் மொழிமாற்றம் செய்து பிரசுரமாக அனைவருக்கும் கொடுக்கப் பட்டது. இறுதியாக செயலாளர் இன்சாப் தீர்மானத்தை வாசித்தார் .இத்துடன் நிறைவுபெற்றது.
தீர்மானங்கள்
- TNTJ தலைமையின் நிதிச்சுமையை குறைக்க உதவுவது,
- FRTJ வை பிரான்ஸ்- ல் அதிகாரபூர்வமாக பதிவு செய்வது ,
- உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்துவது,
- தொழுகை,பிரார்த்தனைகள் போன்ற அடிப்படை விசயங்களை french-ல் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது .