இன்று 22/05/14 பிரான்சில் ஈபில் டவர் அருகில்இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.சாதாரண ஒரு சாலை விபத்தை முஸ்லிம்கள் பெளத்த துறவியை காயப் படுத்தியதாக பொய் பிரசாரம் செய்து தூண்டி விட்டு அப்பாவி முஸ்லிம்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப் பட்டு பல உயிர்கள் பலியாகின.
மற்றும் கோடிக்கணக்கான மதிப்பில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் மீது தாக்குதல் நடை பெற்றது.இதை தடுக்க வேண்டிய போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்தது.இதை கண்டித்து இதற்க்கு காரண மாணவர்களான பொது பல சேனா என்ற தீவிர வாத இயக்கத்தை தடை செய்யுமாறும், இதற்க்கு காரண மாணவர்களை தண்டிக்குமாரும் இனி இத்தகைய வன்முறைகள் நடக்காமல் தடுக்குமாறும் வலியுறுத்தி பிரான்சில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடை பெற்றது.
இதில் இலங்கை முஸ்லிம்களும் இந்திய முஸ்லிம்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர் .பெண்கள் கணிசமாக ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
இதில் பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் தலைவர் ருக்னுதீன் அவர்கள் இலங்கை கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரை யாற்றினார்கள். இன்ஷா அல்லாஹ் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்து ஐநா சபை வரை சென்று நியாயத்திற்காக போராடுவோம் என்ற முழக்கத்துடன் இனிதே நிறைவுற்றது.