கேள்வி : assalamu alaikum. it would be helpful, if You could give me with reference whether removing hair from other than private parts is prohibited or not. which includes waxing the whole body, face.. I have heard that it is allowed to removing hair other than the eyebrows, but have got doubt in it.. jazakallah
– Ashika parveen, india.
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும்.மர்ம உறுப்புகளில் இருக்கும் முடியை தவிர உடலில் உள்ள மற்ற இடங்களில் உள்ள முடிகளை நீக்குவது கூடுமா?இதற்க்கு ஆதாரம் தரவும்.கண் புருவ முடிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள முடியை நீக்குவது கூடும் என்பதாக கூறுகிறார்கள்.இதில் எனக்கு சந்தேகம் உள்ளது .ஜசகல்லாஹ்.
பதில் : மர்ம உறுப்பு மற்றும் அக்குல் போன்ற இடங்களில் வளரும் முடிகளை மழிக்க வேண்டும் என்ற சட்டம் இஸ்லாத்தில் உள்ளது.
இதே நேரத்தில் புருவ முடிகளை நீக்கக் கூடாது என்ற சட்டமும் உள்ளது.
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி (5931)
மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் புருவ முடிகளை அகற்றும் பெண்களை சபிக்கிறார்கள்.
இதே நேரத்தில் மற்ற இடங்களில் உள்ள முடிகளை அகற்றக் கூடாது என்ற தடை நேரடியாக எந்த செய்தியிலும் சொல்லப்படவில்லை. என்றாலும் மேற்கண்ட செய்தியில் மேலதிக தகவலாக நபியவர்கள் கூறிய ஒரு விஷயத்தில் இருந்து நபியவர்கள் எந்த இடத்தில் எல்லாம் மழிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்களோ அந்த இடம் தவிர்ந்த மற்ற இடங்களில் உள்ள முடிகளை மழிக்கக் கூடாது என்ற பொதுவான சட்டம் கூறப்பட்டுள்ளது.
இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!
நபியவர்கள் மழித்த வழிகாட்டிய இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் இயற்கையாக வளரும் முடிகளை மழிப்பது என்பது இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயல்வதாகும் அப்படி செய்வது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் காரியமாகும்.
உருவத்தில் மாற்றம் செய்வது ஷைத்தானின் செயல்பாடாகும்.
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்துவிட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன், அவர்களை வழி கெடுப்பேன், அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்.அவர்களுக்குக் கட்டளையிடுவேன், அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள்.(மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொருப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான இழப்பை அடைந்து விட்டான்.(அல்குர்ஆன் 4: 118,119)
அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வது ஷைத்தானின் செயல் என்று மேற்கண்ட வசனத்தில் இறைவன் நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(அல்குர்ஆன் 95:4)
மனிதனை அழகாகப் படைத்திருக்கிறோம் என்று இறைவன் கூறியிருக்கும் போது நபியவர்கள் காட்டாத, இறைவன் சொல்லாத ஒரு மாற்றத்தை உடலில் நாம் செய்வது என்பது இதற்கு மாற்றமான அதி மேதாவித்தனமான செயல்பாடாகும்.
ஆக நபியவர்கள் உடலில் எங்கெல்லாம் முடிகளை மழித்துக் கொள்வதற்கு வழிகாட்டினார்களோ அதை நடைமுறைப்படுத்தி எதையெல்லாம் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள உருப்புக்களில் இயற்கையாக வளரும் முடிகளை மழிப்பது படைப்பில் மாற்றம் செய்யும் சாபத்திற்குறிய செயல்பாடாகும்.
(ஆண்களைப் போல் எந்தப் பெண்ணுக்காவது இயற்கைக்கு மாற்றமாக மீசை போன்றவைகள் வளருமாக இருந்தால் அவற்றை மழித்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.)
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
– பதில் : ரஸ்மின் MISc
Related
One thought on “மர்ம உருப்பு தவிர்ந்த இடங்களின் முடிகளை நீக்களாமா?”
அஸ்ஸலாமு அலைக்கும்..
புருவத்தை மழிக்க கூடாது, ஆனால் திருத்திக்கொள்ளலாமா..?
தடியாக இருக்கும் புருவத்தை மெலிதாக ட்ரீம் செய்யும் விதமாக ஐ ப்ரோ போன்றவை செய்யலாமா..?
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.
Strictly Necessary Cookies
Strictly Necessary Cookie should be enabled at all times so that we can save your preferences for cookie settings.
If you disable this cookie, we will not be able to save your preferences. This means that every time you visit this website you will need to enable or disable cookies again.
அஸ்ஸலாமு அலைக்கும்..
புருவத்தை மழிக்க கூடாது, ஆனால் திருத்திக்கொள்ளலாமா..?
தடியாக இருக்கும் புருவத்தை மெலிதாக ட்ரீம் செய்யும் விதமாக ஐ ப்ரோ போன்றவை செய்யலாமா..?