‘விடியல் வெள்ளி’ என்று தங்களை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று மக்களை அழைத்த ஒரு கூட்டம், நம்மைப் பார்த்து இணைவைக்கக் கூடியவர்கள் என்று சொன்ன அந்தக் கூட்டத்தின் தற்போதைய நிலையை எடுதுக் கூறினார்.
- கொடி வணக்கம் – (நம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகிறார்க்ளாம்)
- விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வாழ்த்துச் சொல்லி பேனர் வைத்து ஷிர்க்கை ஆதரித்தது
- தங்களது போஸ்டர் நோட்டீஸ்கள் எதிலும்‘பிஸ்மில்லாஹ்’ மற்றும் ‘இன்ஷா அல்லாஹ்’ போடாமல் மத நல்லிணக்கத்தை (?) பேணுவது
- ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லிவிட்டு இப்போது ஓட்டுப் பொறுக்க வந்தது
ஜும்மாவுக்கு இடையூறு செய்த கொள்கைவாதி
நாம் நிகழ்த்தக்கூடிய ஜும்மா உரையில் எந்தச் சந்தேகம் எழுந்தாலும் ஜும்மா உரை முடிந்தவுடன் அதை நேரில் கேட்டால் அதற்கு பதிலளிக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருந்தும் ஜூம்மாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அமானுல்லாஹ் என்பவர் எழுந்து ‘எனக்கு ஒரு சந்தேகம். கேள்வி கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இமாம் ஜும்மா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தனது அருகிலிருப்பவர் பேசிக் கொண்டிருந்தால் அவரைக் கூட ‘நீ பேசாதே! வாய் மூடு’ யாரேனும் சொல்வார்களானால் அவரது ஜும்மா வீணாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தெளிவான கட்டளை. ஜும்மா உரை நிகழ்த்தும் போது, உரை நிகழ்த்தக் கூடிய இமாம் வேண்டுமானால் அத்தியாவசியம் கருதி எதிரே அமர்ந்திருப்பவரிடத்தில் பேச நபி வழி அடிப்படையில் அனுமதியுள்ளதே தவிர, உரையைக்கேட்கக்கூடியவர்கள் வாய்மூடி மௌனமாகத்தான் இருக்க வேண்டும்.
ஜும்மா உரை நிகழ்த்தும் போது நபியிடத்தில் மழை பெய்ய துஆ செய்யச் சொல்லி மக்கள் பேசியுள்ளார்கள் என்பது நபியின் சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில் என்பதை இங்கு நினைவூட்டுகின்றோம்
ஜும்மா உரைக்கு இடையூறு செய்யும் விதமாக இப்படி உரை நிகழ்த்தும் போது இடையில் எழுந்து குழப்பம் செய்த அந்த நபரைக் கண்டு கொள்ளாமல் சகோதாரர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரையை நிறைவு செய்தார். உரை நிகழ்த்தி விட்டு மிம்பரில் இருந்து தொழுகைக்காக இறங்கி வரும் போதும் மீண்டும் இதே போன்று கேட்டுள்ளர். தொழுகை முடிந்த உடன் கேளுங்கள் பதில் தருகின்றேன் என அவர் கூற, ஜும்மா தொழுகையை முடிந்தவுடன் கேள்விகளைக்கேட்டுள்ளார்.
இது போன்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் எழுந்து இமாமிடம் கேள்வி கேட்டால் அவரது கதி என்னவாகியிருக்கும்? தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரை கட்டுக் கோப்பான இயக்கம் என்பதாலும் அறியாமையில் இருப்பவர் மீது ஆத்திரப்படக் கூடாது என்பதாலும் வந்திருந்த மக்களில் பெரும்பாலும் தவ்ஹீத் சகோதரர்களாக இருந்தும் தவ்ஹீத் பள்ளியாக இருந்தும் அவரை ஏதும் செய்யவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே அவரை அலட்சியப்படுத்தினார்கள்.
ஜும்மாவில் கேள்வி கேட்ட இதே கும்பல் நடத்தும் நிக்ழ்ச்சியில் இது போல் பேச்சாளர் பேசும் போது குறிக்க்கிட்டு கேள்வி கேட்க விடுவார்களா? தவ்ஹீத் ஜமாஅத் ரவுடிகளையும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழிவாங்குவோரையும் உண்டாக்கவில்லை என்பதற்கு இது தக்க சான்றாக உள்ளது.
நாங்கள் குர்ஆன் ஹதீசை பின்பற்றக்கூடியவர்களில்லை
ஜும்மா முடிந்த பின் அவரது கேள்விக்கு பதில் சொல்ல கோவை ரஹீம் முன்வந்தார். நீங்கள் கூறுவது போல் நாங்கள் கொடி வணக்கம் எங்கே செய்கின்றோம்? என்பது தான் அவரது அற்புதமான (?) கேள்வி. நீங்கள் கொடியை வணங்குகின்றீர்கள், விநாயகர் சதுர்த்தியை ஆதரித்து வாழ்த்துக் கூறி பேனர் அடித்துள்ளீர்கள் என்று நான் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டால் அந்த அமைப்பிலிருந்து நீங்கள் வெளியேறி விடத் தயாரா? என்ற கோவை ரஹீம் அவர்கள் கேட்ட அடுத்த எதிர்க்கேள்விக்கு மௌனம் தான் பதிலாக இருந்தது.
மேலும், எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் நம்மை நோக்கி ‘நீங்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக் கூடியவர்கள், ஆனால் நாங்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக் கூடியவர்கள் அல்ல’ என்று முழக்கமிட்ட உடனேயே இவர்களது சாயம் அந்த சபையில் வெளுத்ததையறிந்த அனைத்து சகோதரர்களும் ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் முழக்கமிட்டனர்.
அது வரை இவர்களும் மார்க்கத்தைச் சரியாகத் தான் சொல்லி வருகின்றார்கள் என்று இவர்களை நம்பியிருந்த நடுநிலையாளர்களும் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வண்ணம் இவர்களது இந்த அறிவிப்பு இருந்தது.
குர்ஆன் ஹதீஸ் என்றாலே, ‘லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பது தான். நீ குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவனாக இல்லையென்றால் நீ ‘லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற கலிமாவை மறுப்பவனாகி விட்டாய். முதலில் நீ இதை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக வேண்டும் என்று கோவை ரஹீம் அவர்கள் கூற, விழி பிதுங்கிய எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவரோ அடுத்து ஒரு அந்தர் பல்டி அடித்து உளறியுள்ளார்.
நாங்கள் பின்பற்றுவோம், ஆனால் பின்பற்றச் சொல்ல மாட்டோம்
நாங்கள் குர்ஆன் ஹதீசைப் பின்பற்றக் கூடியவர்கள் தான். ஆனால் அதன் பிரகாரம் நடக்கச் சொல்லி அதை மக்களுக்குச் சொல்ல மாட்டோம். போதிக்க மாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் அடுத்த அந்தர் பல்டியை அடிக்க, கூடியிருந்த மக்களுக்கு அது ஒரு காமெடி ஷோ போல காட்சி தந்திருக்கின்றது.
முதலில், ‘நாங்கள் குர்ஆன் ஹதீசைப் பின்பற்றக் கூடியவர்கள் அல்ல’ என்று சொன்னீர்கள். அவ்வாறு சொல்வது நரகத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். அதே நேரத்தில் இப்போது நாங்கள் பின்பற்றுவோம். ஆனால் மக்களைப் பின்பற்றச் சொல்லி ஏவ மாட்டோம். மக்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டோம் என்று இப்போது சொல்கின்றீர்களே இது நயவஞ்சகத்தனம். இப்படித் தான் உள்ளொன்றும் புறமொன்றுமாக வைத்து பேசக்கூடியவர்கள் நபிகளார் காலத்திலும் இருந்தார்கள். அவர்கள் நயவஞ்சகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் நரகத்தின் அடித்தட்டில் மிக ஆழமான பகுதியில் இடத்தைச் சித்தப்படுத்தி வைத்திருப்பதாக சொல்லிக் காட்டுகின்றான். அப்படியென்றால் தற்போது நீங்கள் செய்வது, செய்து கொண்டிருப்பது பச்சையான முனாஃபிக் தனம் என்று பதிலளித்தவுடன் கோபமடைந்த அவரும், அவரோடு சேர்ந்தவர்களும் கொச்சையான அருவருக்கத்தக்க வார்த்தைகளைக் கூறி நம்முடைய சகோதரர்களை ஏசியுள்ளனர்.
மேலும் இவர்கள் பேசிய விஷயங்களை தூரத்தில் நின்று தங்களது செல்ஃபோனில் வீடியோ எடுத்த நமது சகோதரர்களை மிரட்டல் விடுத்தனர். அடித்து உதைத்து விரட்ட முடியும் நிலையிலும் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்று கருதிய நமது சகோதரர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தவுடன் ஜிஹாத் புரிய அழைப்பு கொடுத்த கொள்கைக் (?) கூட்டம் எஸ்கேப்.
தமிழகத்தில் செய்த மிகப் பெரிய ஜிஹாத்
ஜிஹாத் புரிய வாருங்கள் என்று அழைக்கும் இந்த கொள்ளைக் கூட்டம் இதுவரை எந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனியினரோடும் ஜிஹாத் செய்துள்ளார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. அதே நேரத்தில், ஏகத்துவத்தை போதிக்கக்கூடிய நம்மோடு தான் மோதிப் பார்க்கின்றனர்.
பொறுமை நல்லது தான். ஆனால் கோழைத்தனம் என்று இவர்கள் தப்புக் கணக்கு போடும் அளவுக்கு அது இருக்கக் கூடாது என்பது தான் அதிகமான சகோதார்களின் விருப்பமாகும். இவர்கள் வரம்பு மீறும் போது அதே பாணியில் பதிலடி கொடுக்க தலைமை அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட கால தவ்ஹீத் சகோதரர் ஒருவர் குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.