அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
பிரான்ஸில் துல்கஃதா மாதத்திற்கான பிறை அறிவிப்பு,
பிரான்ஸில் கடந்த 23.05.2020 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
அன்று பிறை தென்பட்டால் துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.