விவாத அழைப்பு

2

அதை ஏற்று நாமும் பதிலளித்துள்ளோம்.

நமக்கு வந்த கடிதத்தையும் (மேலே இணைக்கப்பட்டுள்ளது) அதற்கு நமது பதிலையும் இணைத்துள்ளோம்.

 

கடிதம், ஒரு அமைப்பின் லட்டர்பேடில் வந்துள்ளது.

அதன் இறுதியில் தலைவர் என்று ஒருவர் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் அதை எழுதியவரோ வேறொருவராக இருக்கின்றார்.

“நான், நான், நான்!

நான் மேடையில் பேசினேன்; நான் சவால் விட்டேன்; நான் முடித்தேன்; நான் பின்வாங்க மாட்டேன்; என்னுடன் போரிட உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்; பதிலை எதிர்பார்க்கிறேன், என்று தன்னை முன்னிலைப்படுத்தியே கடிதம் முழுவதும் செல்கின்றது.

மவ்லிது பாடலுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினால் பரிசு, மவ்லிது என்னும் பஜனை பாடல் நபி(ஸல்) அவர்களுக்கு உண்மையில் புகழ் சேர்க்கும் என்று நிரூபித்தால் பரிசு என்று தவ்ஹீது ஜமாஅத் சவால் விட்டது என்று கடித துவக்கத்தில் அவர்களே எழுதியுள்ளார்கள்.

உண்மையில் திராணியுள்ளவராக இருந்திருந்தால் அந்த சவாலை ஏற்று மவ்லிது பாடலுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி நிரூபிக்க முன்வந்திருக்க வேண்டும்.

ஆனால் இவர் மேடை போட்டு பேசினாராம். மவ்லிதில் ஷிர்க் இருக்கிறது என்று நிரூபித்து காட்டுங்கள் பார்ப்போம் என்று பதிலளித்தாராம்.

அந்தோ பரிதாபம்.

இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்.

ரபீஉல் அவ்வல் மாதம் ஒரு மவ்லிது.
ரபீஉல் ஆஹிர் மாதம் முஹையித்தீன் மவ்லிது
அடுத்த மாதம் நாகூர் மவ்லிது
ஜாபர் ஸாதிக் மவ்லிது, அஜ்மீர் மவ்லிது, குல சாமி மவ்லிது, ஊர் சாமி மவ்லிது என்று திணுசு திணுசா ஓதப்படும் இவை இறைவணக்கமா?

இவற்றை பாட பள்ளிவாயில்களிலும் வீடுகளிலும் அலங்காரமும் ஜோடனைகளும் செய்து விழாக்கோலம் கொள்ளப்படுகிறதே! இவ்வாறு செய்ய ஆர்வமூட்டப்படுகிறதே!

இதை மறுப்பவர்களை மார்க்கத்தில் வழி தவறியவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறதே!

இவற்றில் பிரதானமான சுப்ஹான மவ்லிது என்னும் பாடல்களை மட்டுமாவது இறைவணக்கம் என்று நிரூபிக்கத் துணிய வேண்டாமா?

மவ்லிது வரிகளில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவையும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வரிகளும் உள்ளன என்று நாம் சொல்கிறோம்.

அப்படியானால் அத்தகைய வரிகளை நீக்கிவிட்டு ஓதலாமா என்று சிலர் பாமரத்தனமாக கேட்கிறார்கள்.

அதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்,

“மவ்லிது பாடல்கள் இறைவணக்கமல்ல! அவற்றில் பிழையில்லாத வரிகளை பாடினாலும் நன்மையில்லை!

பயனற்றவற்றில் நேரத்தை வீணாக்காமல் இறைவணக்கத்தில் ஈடுபடுங்கள்! குப்பைகளை சாக்கடையில் வீசுங்கள்!” என்பதாகும்.

தொழுகிறோம். நோன்பு நோற்கிறோம். ஹஜ் செய்கிறோம். குர்ஆன் ஓதுகிறோம். திக்ர் செய்கிறோம். துஆ செய்கிறோம்.
இவையாவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட்ட வணக்கங்களாகும்.

அது போல ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் சுப்ஹான மவ்லித் ஓத வேண்டும் என்று கூறி அதை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளுக்கு அழைப்பது போல மவ்லிது ஓத அழைப்பு விடுக்கிறார்கள்.

தொழுகை ஓர் வணக்கம், நோன்பு ஓர் வணக்கம். ஆனால் மவ்லித் ஓதுவது இறைவணக்கமாகாது.

இதை தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஜமாஅத்தின் ஆதரவாளர்களும் மக்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்.

அந்த பிரச்சாரம் மக்களைச் சென்றடைந்துள்ளது .

மக்களை நேர்வழியில் செல்லவிடாமல் பாதையின் குறுக்கே அமர்ந்து வழிகெடுக்கும் அசத்தியவாதிகளை இந்த பிரச்சாரம் கிலியடைய செய்துள்ளது அல்லாஹ்வின் பேரருளே.

அல்லாஹ்வின் அருளால் இன்னும் கூடுதலாக இவர்களது முகத்திரையை கிழித்து தொங்க விடுவதற்கான வாய்ப்பு இது.

நம் ஒவ்வொருவருக்கும் இது புதிய உத்வேகத்தை அளிக்கும்.
இன்ஷா அல்லாஹ்!

அசத்திய கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலையும் உடைத்தெறிந்து உருக் குலைக்கும் வரை ஏகத்துவ கொள்கைச் சகோதரர்களுக்கு ஓய்வில்லை என்பதை நினைவூட்டுகிறது.

மேலும் அவர்களது கடிதத்தில் புஹாரியில் இருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டியுள்ளனர்.

இது மிகுந்த ஆச்சரியமாகவே நமக்கு உள்ளது. ஏன் தெரியுமா ?

ஆலிம்கள் சொன்னால் கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்று சொன்னவர்கள் இவர்கள்.

அந்தப் பெரியார் சொன்னார், இந்தப் பெரியார் சொன்னார், அந்த மத்ஹப் நூலில் இருக்கு, இந்த அரபி நூலில் இருக்கு என்று சொன்னவர்களை,

இன்று புஹாரியில் இருக்கு, நபி(ஸல்) வாழ்நாளில் நடந்ததுள்ளது ,. நபித் தோழர் இப்படி சொன்னார் என்று நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை மேற்கோள் காட்ட வைத்துள்ளது.

நம்மில் சாமானியர்களும் செய்யும் ஏகத்துவப் பிரச்சாரத்தின் விளைவைப் பார்த்தீர்களா?

நம்மை உற்சாகமூட்டும் வகையில் அல்லாஹ் நமது பணியின் விளைவை காட்டியுள்ளான்.

அல்ஹம்துலில்லாஹ்

நாம் சரியான இலக்கு நோக்கி செல்கிறோம் என்பதையும் செய்ய வேண்டிய பணி இன்னும் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த ஹதீஸையும் முழுமையாக போடாமல் துண்டாடி இருக்கிறார்.

அதுவும் தனக்கு எதிரான ஹதீஸ் என்பது கூட புரியாமல் போட்டிருக்கிறார்.

மவ்லிது பாடலுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினால் பரிசு என்று முதலில் விவாத அழைப்பு விட்டதே தவ்ஹீத் ஜமாஅத்தான்.

இதை அவரே ஒப்புக் கொள்கிறார். அப்புறம் எப்படி தவ்ஹீத் ஜமாஅத் புறமுதுகிட்டு ஓடியது?

தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பை ஏற்காமல் அப்பாவி மக்கள் ஒரு சிலரை பஜார் திடலில் கூட்டிவைத்துக் கொண்டு, வசதியில்லை என்று வாய்ச் சவடால் அழைப்பு விட்டது யார் ?

இதில் தொடை நடுங்கியது யார் ? என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா ?

பஜனை பாடல்களை பாடாதீர்கள் என்று சொல்லும் நாம் அந்த பாடல்களை ஒவ்வொரு வரியாக பாடிக் காட்டி விளக்க வேண்டுமாம்.

என்ன ஒரு நப்பாசை!

அவர் நம்மோடு போருக்கு வருவாராம். ஆனால் அவர் ஆசைப்படும் நபரோடுதான் போரிடுவாராம்! அவரது கடிதத்தை படியுங்கள்; சிரித்து விடுவீர்கள்.

அவரது உடம்பெல்லாம் நடுங்குகிறது, வியர்த்து வழிகிறது என்பதனைத் தான் பார்க்க முடிகின்றது.

இறுதியாக,

தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான கருத்துடைய எவருடனும் விவாதத்திற்கு தயார்.

யாருடனும் விவாதிப்போம்.

ஒழுக்கங் கெட்டவர்களை ஒதுக்கித் தள்ளுவோம்.

மவ்லிது பாடல்களை நபிகள் நாயகம் பாடவில்லை. நபியவர்களின் காலத்தில் மவ்லிது பாடல்கள் பாடப்படவுமில்லை. நபியவர்களின் அங்கீகாரம் இந்த மவ்லித்களுக்கு இல்லை.

மவ்லிது பாடல்களைப் பாடுவது இறைவணக்கமல்ல.
மவ்லிது பாடல்களைப் பாடுவது இறைவணக்கம் என்று சொல்லுவோர் இனி அடிக்கப்போகும் அந்தர் பல்டிகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

இறைநம்பிக்கையாளர்கள் (எதிரிப்)படைகளை கண்டபோது அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது இதுதான் அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையே உரைத்தனர் என்று கூறினார்கள் இது அவர்களுக்கு இறை நம்பிக்கையையும் வழிபடுவதையும் அதிகரித்தது

அல்குர்ஆன் 33 : 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.