இந்த நூலுக்கு ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தின் மாத இதழான சமரசம் இதழ் கீழ்க்கண்டவாறு நூல் மதிப்புரை வெளியிட்டிருந்தது.
1989 களிலிருந்து அறிஞர் பிஜே அவர்கள் அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருக்கும் போது, இஸ்லாத்தின் மீது மாற்றார் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் ‘மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். அந்த ஆக்கங்களில் அறிவுபூர்வமாக அவர்களின் விமர்சினங்களுக்கு இஸ்லாத்தில் சார்பில் தக்க பதில்களை முன்வைத்தார்.
இந்து,கிறிஸ்தவ,நாத்திக முகாம்களிலிருந்து இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் எவ்வாறு பதில் அளிப்பது என்று மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் கூட விழி பிதுங்கிக் கொண்டிருந்த போது, பீஜே தனது பேனாவின் வலிமையை நிரூபித்துக் காட்டினார். அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதில்களை அழகான முறையில் வழங்கினார். அவை மாற்றாரின் மனங்களையும் வேகமாக ஊடறுத்து தாக்கம் செலுத்தியது. பலரை இஸ்லாத்தின் காதலர்கலாக்கிய பெருமை இந்த நுாலுக்கு உண்டு.
அந்த ஆக்கங்கள் இஸ்லாம் குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற பொதுத் தலைப்பில் மூன்று பாகங்களாக 1994ம் ஆண்டுகளில் வெளிவந்து பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற பொதுத்தலைப்பில் இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றதா? என்ற பிரதான உள்ளடகத்தோடு முதல் பாகம் 1994ல் வெளிவந்த போது அந்த நூலை சமரசம் இவ்வாறு அறிமுகப்படுத்தியது.
இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா?
ஆண் பெண் சமத்துவம்
பலதார மணம் தலாக்
ஜீவனாம்சம்
ஹிஜாப் (பர்தா)
பாகப் பிரிவினை
சாட்சிகள்
அடிமைப் பெண்கள்
ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாலேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.
மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு’இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ‘ எனும் இந்நூல் பதில் தருகிறது.