போலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை- ஆஸி. அரசு

ஆகஸ்ட் 31, 2011,சிட்னி: முஸ்லீம் பெண்கள் அணிந்துள்ள பர்தாவை, போலீசார் கூறினால் நீக்கி முகத்தை காட்ட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும், என ஆஸ்திரேலியா அரசு கெடுபிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் குற்றவாளியான ஒரு கிறிஸ்துவ பெண்ணிற்கு பதிலாக, பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் போலீசாரால் தவறுவதாக கைது செய்யப்பட்டார். பின்னர், சோதனையில் அவரல்ல என கண்டறியப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.

பொது இடங்களில் பெண்கள், பர்தா அணிந்து வருவதால், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தப்புவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு, அடுத்த வாரம் முதல் புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளது.

அதன்படி, சாலையில் செல்லும் முகமுடி அணிந்தவர்கள், ஹெல்மேட் அணிந்தவர்கள், பர்தா அணிந்தவர்கள் ஆகியோரை, சந்தேகத்தின் பேரில் முகத்திரையை போலீசார் நீக்க கூறினால், உடனே அவர்கள் முகத்தை காட்ட வேண்டும். அப்படி காட்டாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

அதையும் மீறினால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். முகத்தை காட்டிய பின் தங்கள் முகத்திரை போட்டுக் கொள்ளலாம். பொது இடங்களில் முகத்தை காட்ட கலாச்சாரம், மதம், தனிப்பட்ட நம்பிக்கைகள் தடுக்கும் பட்சத்தில், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று முகத்தை காட்டலாம்.

நீதிமன்றங்களிலும் இந்த சட்டம் அமலில் இருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில், பெண்களின் முகத்திரையை விலக்கி பார்க்கும் அதிகாரம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது சட்டமாகவே இயற்றப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பெல்ஜீயம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் சில பகுதிகளுக்கு அடுத்தபடியாக தற்போது, ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

செய்தி : oneindia.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.