பிரான்ஸில் ஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

பிரான்ஸில் ஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

பிரான்ஸில் கடந்த 20-08-2020 வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை இரவு மஹ்ரிபிலிருந்து பிரான்ஸில் முஹர்ரம் மாதத்திற்கான முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 18-09-2020 வெள்ளிக்கிழமை இன்று சனிக்கிழமை இரவு மஹ்ரிபிற்குப் பிறகு ஸஃபர் மாதத்திற்கான பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

நமது FRTJ கொள்கை சகோதரர்கள் பலர் தன்னார்வத்துடன் பிறையை பார்ப்பதற்கு 8 ஊர்களில் முயற்சி செய்தார்கள் பிறை எங்குமே தென்படவில்லை அல்ஹம்துலில்லாஹ்.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 19-09-2020 சனிக்கிழமை நாளை இரவு மஹ்ரிபிலிருந்து பிரான்சில் ஸஃபர் மாதத்திற்க்கான முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
18-09-2020.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.