கேள்வி : என்னுடைய கேள்வி இது அதாவது பாவம் செய்தால் தான் அல்லாஹ்.. ரப்புல் ஆலமீன் பாவமாக லிஸ்டில் கணக்கெடுக்கிறான். ஆனால் பாவம் செய்ய நினைத்தால் செய்யாத வரை அதை பாவமாக கணக்கெடுப்பதில்லை..?என்று பெருமானார் ஸல்.. கூறியதாக ஹதீஸ் இருப்பதாக இங்குள்ள (பிரான்ஸ் நாட்டில் உள்ள) தவ்ஹீத் சகோதரர்கள் சில.. பேர் வட்டி கட்டுவதற்க்கு உடன்பட்டு வீடு வாங்கிவிடுகிறார்கள். பிறகு அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.அந்த கடனை அரசாங்கம் சில சலுகைகள் காரணமாக கட்டுகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் பாவம் செய்யவில்லை.. பாவம் செய்ய நினைத்தோம். அதனால் அல்லாஹ்.. எங்களுக்கு இதை பாவகணக்கில் எழுத மாட்டான். என்று கூறிக்கொண்டு அவர்களும் சொந்தமாக வீடுவாங்கிக்கொண்டு மற்றவர்களையும் சொந்த வீடு வாங்க தூண்டுகிறார்கள். இது எந்த விதத்தில் சரி என்று எனக்கு குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதீன். (பிரான்ஸ்)
வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.
பாவம் செய்யாத வரை (பாவம் செய்ய நினைத்ததற்காக) அதனை பாவமாக இறைவன் கணக்கெடுப்பதில்லை என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. ஆனால் உங்கள் கேள்வியில் வீடு வாங்குபவர்கள் வட்டி கட்டுவதற்காக ஒத்துக் கொண்டுவிட்டு அதன் பின் அரசாங்கம் வழங்கும் சழுகையில் அதனை விட்டுவிடுவதாக்க் கூறியுள்ளீர்கள்.
வட்டி கட்டுவதாக ஒத்துக் கொண்டாலே வட்டியுடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் (பாவத்தை செய்துவிட்டார்) அப்படி இருக்கும் போது நாங்கள் நினைத்தோம் செய்யவில்லை என்பது சரியான பதில் இல்லை.
வட்டியுடன் தொடர்பு பட்டதற்காக கண்டிப்பாக இவர்கள் தண்டனைக்குற்பட்டவர்கள் தாம்.
அது மட்டுமன்றி நாங்கள் பாவத்தை நினைத்து செய்யாமல் விட்டவனை அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்பது யதார்த்தமாக உள்ளதாகும். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே அப்படி நடப்பது என்பது ஹதீஸ்களை கிண்டல் செய்வதைப் போலாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131)நம்பிக்கை கொண்டோரே ! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)
வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)
வட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹழாலானதாகும்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)
வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (2:278)நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)
வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)
நபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது.
فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (4:160.161)யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)
வட்டி செல்வத்தை பெருக்காது, ஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.
وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ (30:39)மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)
அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்). (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள். (புகாரி – 2086,2238)
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் – 2995)
வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.
பெரும்பாவங்களில் ஒன்று.
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி – 6857)
ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
வட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.
ஆக வட்டி என்ற கொடுமையான பாவத்தை விட்டும் ஒதுங்கி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
– பதில் : ரஸ்மின் MISc