ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல் குர்ஆன் 7 – 31)
லாண்ட்ரியில் துவைத்த துணியை உடுத்தி தொழலாமா?
கேள்வி : assalamu allikkum i am working in abudhabi.my all cloths washing in laundry . in all labours cloths put it in same mechine ithan mulam washing mechinel wasing saitha dress ghalai namazuukku use pannum poldu ennudiia prayer (namaz) kuduma kudatha villakkam tharavum.
ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தமிழாக்கம் : நான் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய துணிகளை லாண்டரி(துணி சலவை கடை)யில் கொடுத்து தான் சுத்தம் செய்யப்படுகிறது. வேலை பார்பவர்களின் அனைத்து துணிகளும் அதே machine மூலம்தான் துவைக்கப் படுகிறது. இதன் மூலம் துவைத்த துணியை நான் உடுத்திக் கொண்டு தொழுதால் என் தொழுகை கூடுமா?விளக்கம் தரவும்.
– Abdul razak sharfudeen sharfudeen UAE
பதில் : அன்பின் சகோதரருக்கு ! நீங்கள் தாராளமாக அந்த இயந்திரத்தில் போட்டு துவைத்துக் கொள்ளலாம். ஏன் என்றால் washing machine என்பது ஆடைகளை இலேசாகவும், தூய்மையாகவும் துவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இயந்திரமாகும்.
அதில் துவைத்த ஆடைகளை அணிந்து தொழுவதற்கு இஸ்லாம் எந்நேரத்திலும் தடை விதிக்கவில்லை.
இருப்பதில் சிறந்த, தூய்மையான ஆடையை அணிந்து தொழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
மற்றவர்களின் ஆடையுடன் உங்கள் ஆடை சேர்த்து துவைக்கப்பட்டாலும் அனைத்து ஆடையும் சுத்தம் செய்யவதற்காகவே போடப்படுகிறது. அனைவரின் ஆடையும் சுத்தமாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஆடையில் நீங்கள் தொழுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பதில் : ரஸ்மின் MISc