ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா?

(குறிப்பாக மாற்று மதத்தவருடன்)ஓடிப்போகும் பெண்கள் அல்லது தவறான நடத்தை உடைய இஸ்லாமிய பெயர் தாங்கி பெண்கள் பிடிபடும்போது அவர்களை அடித்து திருத்த நினைப்பது சரியா? இதற்க்கு என்னதான் தீர்வு?
– Mohamed Rafeek ( India )
பதில் :முதலில் உங்கள் கெள்வி பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். அதாவது, இன்றைய கால கட்டத்தில் ஓடிப்போகும் பெண்கள் பலரை நாம் காண முடிகிறது. 
இப்படி அவர்கள் ஓடிப்போவதற்கு அவர்கள் மாத்திரம் காரணம் அல்ல.
ஒரு ஆணும், பெண்ணும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியாக அவர்களுடைய வளர்புடன் தொடர்புடையவர்கள் தான் பொருப்பாக இருக்கிறார்கள்.
அதாவது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விட்ட குறைதான் ஓடிப்போகும் அளவுக்கு அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
எனது பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்.
என் பேச்சை அவள் தட்டவே மாட்டாள்,
நான் கிழித்த கோட்டை தான்ட மாட்டாள்.
இப்படியெல்லாம் பேசும் பெற்றோர் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். “உங்கள் பிள்ளைகளும் பெண்கள் தான்” என்பதை.
பெண்களை பொருத்தவரை அவர்கள் ஒரு கொடியைப் போன்றவர்கள் எங்காவது படர்ந்து கொள்ள ஒரு இடம் கிடைக்கிறதா என்று எண்ணுபவர்கள். ஒரு இடம் கிடைத்தால் அதுவே அவர்களுக்கு ஆறுதலான விஷயமாக மாறிவிடும்.
அதன் பின் தாய் சொன்னாலும் விளங்காது, தந்தை சொன்னாலும் விளங்காது.
அது மட்டுமன்றி இது போன்ற தகாத ஆண், பெண் உறவு முறைகள் உருவாகுவதற்கு காரணமாக பல செயல்பாட்டை குறிப்பிடலாம். செல்போன் பாவனை, ஆண், பெண் கலப்புப் பள்ளிகள், தகாத உறவு முறைகள் என்று பலதையும் நாம் குறிப்பிடலாம்.
பிள்ளைக்கு எவ்வளவுதான் தேவை இருந்தாலும் செல்போனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் கல்லூரிகளில் மட்டும் சேர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்கள் உண்மையான உறவினர்கள் யார் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவர்களுடன் மாத்திரம் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் உறவாட அனுமதியுங்கள். இப்படி நடந்தால் மாத்திரமே இந்த தீய செயலை நாம் தடுக்க முடியும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 – 6)
நம்மையும், நமது குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் நாம் பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.
நமது பிள்ளைகள் மாற்று மதத்தவருடனோ அல்லது நமது முஸ்லீம் ஆண்களுனோ யாருடனும் ஓடிப்போகாமல் நாம் நம் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்க வேண்டும். 
ஒரு பிள்ளை தவறு செய்தால் அந்தப் பிள்ளையை திருத்துவதற்குறிய அனைத்து அதிகாரமும் பெற்றோருக்கு உள்ளது. அவர்களை கண்டித்துத் திருத்துவதில் எந்தத் தவறும் இல்லை. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். புகாரி (2554)
மறுமை நாளில் பெற்றோரின் பொருப்புக்ள பற்றி விசாரிக்கப்படும் போது தன் பிள்ளைகள் பற்றிய விசாரனையும் முக்கியமானதாகும்.அப்படி இருக்கும் போது நாம் நமது பிள்ளைகளை திருத்துவதில் எந்த்த் தவறும் இல்லை.
பதில்  : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.