தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் !

வேன் பேர்நெல்(நடுவில்)
தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல்(Wayne Dillon Parnell) 28/7/2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.

பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்.இவருடைய பெயரை வலீத் ,பொருள் புதிதாக பிறந்த மகன் என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்,” என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.

ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால்தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயம் படுத்தவில்லை.ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.

பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL(Indian premier League) போட்டியில் “பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்” என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :

ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.


நன்றி : sport24.co.za

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.