Coca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்!!

பெயர் :   Mohamed Rafeek

நாடு :   Riyadh , Saudi Arabia

தலைப்பு : Coca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்!!

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் இணையதளம் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.
எனினும் “காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல்” பொருட்கள், சர்க்கரை, தண்ணீர், நிறமிகள் என்று மட்டுமே கோலாவில் அச்சிடப்படும். அந்த இயற்கை சுவை கூட்டலில் என்ன பார்முலா என்பது ரகசியம்.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

கோகோ-கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலாளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த பார்முலா எழுதப்பட்ட காகிதத்தை அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கிறது கோலா நிறுவனம்.
ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
அவ்விணையத்தளம் வெளியிட்டுள்ள கோக கோலா உற்பத்தி பார்முலா இவைதான்.
Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required). 
Water 2.5 gal. 
Lime juice 2 pints 1 qrt. 
Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour. 
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup). 
Alcohol 8oz .
Orange oil 20 drops. 
Lemon oil 30 drops. 
Nutmeg oil 10 drops. 
Coriander 5 drops. 
Neroli 10 drops. 
Cinnamon 10 drops.

நன்றி : http://www.newsonews.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.