Name(பெயர்) : insaaf mohammed
Title(தலைப்பு) : முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி
“முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் இலக்கிய அணியைச் சேர்ந்த -ஹிதாயதுல்லா மகன் ரஷீத் அரபாத்துக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.
இத்திருமண விழாவில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற ஹிதாயதுல்லாவின் கோரிக்கைகளை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன் எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசில் சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லாரும் கலந்து பேசி அதற்கு பின் தான் இதை வெளியிட முடியும். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று கூறினார்.
“ஹிதாயதுல்லாவின் பேச்சைக் கேட்ட போது, என்னை அழைத்தது மணவிழாவிற்கா அல்லது மாநாட்டிற்கா என புரியவில்லை. அவரது கோரிக்கைகள் கைகழுவப்படாமல் நிச்சயம் பரிசீலிக்கப்படும். அதற்கான மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கும் நாள் விரைவிலே வரும்” என்று குறிப்பிட்ட முதல்வர் மேலும் பேசுகையில்,
– நாளிதழ் செய்தி
5-7% வரை இட ஒதுக்கீடு கிடைக்க இன்ஷா அல்லாஹ் துஆ செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்.. விரைவில் கிடைக்க கூடிய அறிகுறிகள் இப்பொழுதே தென்பட ஆரம்பித்துவிட்டன. அல்ஹம்துலில்லாஹ்..