கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் .கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் சஹிஹான ஹதிசா ஆதாரத்துடன் விளக்கவும்.

farjana farvine – paris

பதில் : கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் இருக்கிறது என்ற கருத்தில் ஸஹீஹான ஹதீஸ்கள் நிறையவே இருக்கின்றன.புகாரி, முஸ்லிம் போன்ற பல கிரந்தங்களில் இந்தத் தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مَنْصُورٍ عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهُوَ مَرِيضٌ فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا مِنْ السَّامِ قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (خ:5687)
காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதி-ருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமை’த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், “சாம் என்றால் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “மரணம்” என்று பதிலளித்தார்கள். (புகாரி – 5687)
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ قَالَ ابْنُ شِهَابٍ وَالسَّامُ الْمَوْتُ وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ (خ :5688)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கருஞ்சீரக விதையில் “சாமை’த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள். (புகாரி – 5688)
“சாம்’ என்றால் “மரணம்’ என்று பொருள். “அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) “ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.

கருஞ்சீரகத்தை மருத்துவப் பொருளாக நாம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் இன்று நமக்கு மத்தியில் சிலர் மிஸ்வாக் என்ற பெயரில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அலைவதைப் போல் கருஞ்சீரகத்தையும் பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலைவதைப் பார்க்கக் கிடைக்கிறது. இப்படி பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலையும் படியோ அல்லது ஒவ்வொரு தொழுகையின் பின்னும் அதை உண்ணும் படியோ அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ எந்த இடத்திலும் வழிகாட்டவில்லை.

பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.