[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 05:35.57 மு.ப GMT ] : தலைநகர் பாரிஸ் மற்றும் அருகாமை பகுதிகளில் முஸ்லிம்கள் வீதிகளில் பிரார்த்தனை செய்து வந்தனர்.

வீதிகளில் பிரார்த்தனை செய்வது என்பது ஏற்க முடியாத ஒன்று. பிரான்சின் மதச்சார்பின்மை கொள்கைக்கு இது முரணானது என அமைச்சர் தெரிவித்தார். வீதிகளில் நடக்கும் பிரார்த்தனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்ளுர் மசூதிகளில் போதிய இடம் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் பாரிசின் 18வது அரோன்டிஸ் மென்ட்டில் 2 வீதிகளில் பிரார்த்தனை நடத்தினர். முஸ்லிம்கள் பிரார்த்தனைக்கு ஒதுக்கப்படும் கட்டிடங்கள் செப்டம்பர் 16ஆம் திகதி முதல் தயார் நிலையில் இருக்கும்.
பெரு பிரான்சின் 2வது நகரமான மார் செய்லேவிலும் வீதிகளில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அங்கும் வீதி பிரார்த்தனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
செய்தி : Newsonews.com