இன்ஷா அல்லாஹ் சொல்வதின் முக்கியத்துவம்

அடிப்படைக் கொள்கை :
ஒரு முஸ்லிம் எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் அந்த காரியம் அல்லாஹ் நினைத்தாலே தவிர அது நடைபெறாது என்று உறுதியாக நம்ப வேண்டும்.இதை பல குர்ஆன் வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் நமக்கு தெளிபடுதுகிறது.


(நபியே!) நீர் கூறுவீராக (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.(அல் குர்ஆன் 3:26,27)


இந்த ஒரு அடிப்படை கொள்கையை வாயளவில் அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் இதை செயல் முறை படுத்தவும் வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகிறான்.இந்த நம்பிக்கையை எப்படி செயல் முறைப்படுத்துவது? இந்த நம்பிக்கையை செயல்முறைப் படுத்த இஸ்லாம் நமக்கு எளிதான ஒரு வழியை கற்றுக் கொடுக்கிறது.அதுதான் “இன்ஷா அல்லாஹ்” என்ற வார்த்தையை மொழிவது.இந்த வார்தயினுடைய பொருள் “அல்லாஹ் நாடினால் ” ஏன்பதாகும்.எதிர்காலத்தில் நடக்கக் கூடிய எந்த ஒரு காரியத்தை பற்றி பேசினாலும் இந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு போதிக்கிறது.இந்த வார்த்தையை அரபு மொழியில் தான் பயன் படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை,உங்கள் சொந்த மொழியிலே கூட பயன்பாடுதிக் கொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் கூறுவதின் நோக்கம்


இஸ்லாத்தின் இன்னொரு அடிப்படையான கொள்கை , அல்லாஹ்வை தவிர யாருக்கும் மறைவான விஷயம் தெரியாது என்பதாகும்.நபி மார்களுக்கு கூட அல்லாஹ் அறிவித்து தந்தாலே தவிர மறைவான விஷயம் எதுவும் தெரியாது.இதை கீழ் உள்ள வசனம் நமக்கு தெளிவு படுதிகிறது.


அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)


நிச்சயமாக எதிர்காலம் என்பது மறைவான ஒன்றே.இந்த ஒரு வசனம் ஜோசியம் ,நல்ல நாள் கெட்ட நாள் பார்ப்பது போன்ற மூட பழக்கங்களுக்கு முற்றுப் புல்லி வைக்கிறது. எதிர்காலத்தில் நடக்கக் கூடிய எந்த ஒரு விஷயமும் அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை.மனிதனுடைய இந்த இயலாமையை ஒப்புக் கொண்டு அல்லாஹ்விடம் கை ஏந்துவதையே அவன் விரும்பிகிறான்.எந்த ஒரு காரியமும் அல்லாஹ் நாடினால் தான் நடக்கும் என்ற ஒரு நினைப்பு மனிதனுக்கு இருந்தால் தான் அது அவனுக்கு இறை அச்சத்தை உண்டாக்கும்.

இன்ஷா அல்லாஹ் சொல்வதில் அலட்சியம்


நாம் அனைவருக்கும் நாம் செய்யும் செயல் நன்மையாக அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.ஆனால் அதற்க்கு இஸ்லாம் கூறும் வழிமுறையை பின்பற்றுவதில் தான் பலருக்கு கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்பதை கூறுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.சிலர் இன்ஷா அல்லாஹ் கூறுவது சுன்னத் தான் கடமை இல்லை எனவும் வாதிடுகின்றனர்.இவர்களுடைய வாதம் தவறு என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்றுஎதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! “எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்என்று கூறுவீராக!(அல் குர்ஆன் 18:24)


இதோடு விட்டு விடாமால் நீங்கள் “இன்ஷா அல்லாஹ்” கூறாமல் நடக்கப் போவதை கூறினால் அந்த காரியம் நல்லதாக அமையாது அல்லது நடக்கப் போகும் தீமைகளிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க மாட்டான் என்பதை அழகாக எடுத்துக் காட்டுடன் அல்லாஹ் தன திருமறையிலே தெரிவிக்கிறான்.


அந்தத் தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம்.”காலையில் அதை அறுவடை செய்வோம்என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.அது காரிருள் போல் ஆனது.”நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள்.தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள்.அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது நாம் வழி மாறி (வேறு இடம்) வந்துவிட்டோம் என்றனர்.இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் “நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.”எங்கள் இறைவன் தூயவன்.10 நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்என்றனர்.அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.”எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!என்றனர்.”இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்” (என்றும் கூறினர்.)இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும்.(அல் குர்ஆன் 68:17-33)


நபிமார்களின் எடுத்துக்காட்டு


திருக் குர்ஆனில் பல இடங்களில் நபிமார்கள் “இன்ஷா அல்லாஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்என்று (மூஸா) சொன்னார்.(அல் குர்ஆன்18:69 )


(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் – ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.
(அல் குர்ஆன் 28:27 )


நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் (பனூஸாலிம்) சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கின்றேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளநீர் வழிந்தோடும். இந்நிலையில் அவர்களுடைய பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலுவதில்லை. ஆகவே,அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வந்து (எனது வீட்டில்) ஓரிடத்தில் தொழுகை நடத்த வேண்டுமென்றும், (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்” என்று சொன்னார்கள்.(புஹாரி 425 ,முஸ்லிம் அத்தியாயம்: 5, பாடம்: 5.48, எண் 1052 )


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் (மக்கா மீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ்(அல்லாஹ் நாடினால்) நாம் தங்கப்போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் முஹஸ்ஸப்என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சூளுரைத்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புஹாரி 4284)


நபிமார்களை நாம் பின் பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் குர்ஆன் வசனம்.


“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல் குர்ஆன் 3:84)


(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்  (அல் குர்ஆன் 3:31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.