அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 11-11-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆன்லைன் மூலம் சகோதரர் அப்பாஸ் அலி MISC (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் எதிர் வரும் முஹர்ரம் மாதத்தை பற்றியும் , அதில் சிறப்பு மிக்க சுன்னத்தான ஆஷுரா நோன்பை பற்றியும் எடுத்து கூறி ஒரு சிறிய உரைக்குப் பின் ” இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சிறப்பான முறையில் சகோதரர் அப்பாஸ் அலி MISC அவர்கள் பதிலளித்தார்கள்.
நமது சகோதரர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மார்க்க சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள் . இறுதியில் மிகுந்த திருப்தியோடும் , மன நிறைவோடும் சென்றார்கள் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
இங்கு நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சடைவில்லாமல் தொடர்ந்து 2-30 மணி நேரம் பதிலளித்தார்கள் ஜசாக்கல்லாஹு ஹைரன் .
அனைவருக்கும் தொழுகை பற்றிய சிறிய கையேடு frtj சார்பில் இலவசமாக கொடுக்கப் பட்டது!
இந்நிகழ்ச்சியை நமது சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ இன் துணை தலைவர் சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் வீடியோவை நமது(www.frtj.net) இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். மேலும் நிகழ்சிக்காக உழைப்புகள் செய்து பங்களிப்பு செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும், நிகழ்ச்சி அரங்கத்தை கொடுத்து உதவியவர்களுக்கும் FRTJ சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.