பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு(2011-2013)

19/03/2011 அன்று அனைத்து பிரான்ஸ் மண்டல நிர்வாக தேர்வு பொதுக்குழு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைமை நிர்வாகிகள் முன்னிலையில்  நடந்து முடிந்தது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாக அமைப்பு குறித்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்தால் இந்த கொள்கை பிடிப்புள்ள சிறிய கூட்டம் இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியால் பின்பு பெரும்கூட்டமாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.மேலும் பல நிர்வாக ஆலோசனைகளும் கூறி இணையம் மூலம் நேரடியாக உரையாற்றினார்கள்.

நிகழ்வுகள்

1) TNTJ தலைமை நிர்வாகிகள்(பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் ) முன்னிலையில் நமது FRTJ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.தேர்வான நிர்வாகிகளின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

2) நிர்வாக சம்பந்தமான சந்தேகங்களுக்கும் ,உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் பல ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

3) நேரடி இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ,மாற்று மதத்தினருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.

4) WWW.FRTJ.NET இணையதளத்திற்கு அனுமதி பெறப்பட்டது.

5) நேரடி நிர்வாகிகள் தேர்வு நல்லவிதமாக முடிந்ததுடன் நிர்வாகிகள் மற்றும் கருத்து கேட்பு நிகழ்சிகள் மற்றும் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது இதில் நிர்வாகம்,தாவா மற்றும் சமுதாயப் பணிகள்,செயல்பாடுகள் ,மற்றும் WWW.FRTJ.NET இணையத்தளம் போன்ற பல விஷயங்கள் விவாதித்து அனைத்திற்க்கும் தீர்வு காணப்பட்டது.

மேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த செயற்குழு  அமர்வு, இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு கூட்டம் நிறைவுற்றது.

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விபரம்:

மண்டலத் தலைவர் : காதர் முஹைய்யதீன்(அதீன்)

மண்டல துணை தலைவர் : அப்துல் ஹக்கீம்
மண்டல செயலாளர் : முஹம்மது இன்சாப்
துணைச்செயலாளர் : முஹம்மது ருக்னுதீன்
மண்டல பொருளாளர் : ஃபஸ்ருல் ஹக்

தொடர்புக்கு :

தலைவர் காதர் முஹைய்யதீன்(அதீன்)
தொலைபேசி :0033651152157
மின் அஞ்சல் : adeen@frtj.net

செயலாளர்

முஹம்மது இன்சாப்
தொலைபேசி : 0033678596284
மின் அஞ்சல் : insaaf@frtj.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.