மார்ச் 19-2011 : பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இவர் தனது பிரசாரத்தை தொடங்கிய இடம் வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயில். அங்கு சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.
என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த “சென்டிமெண்ட்’தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனர்.
அதுமட்டுமல்ல, மைதீன்கான் அங்கு ஒரு தேர்தல் அலுவலகத்தையும் திறந்துவைத்தார். இதுதான் வாய்ப்பு என நினைத்த அப்பகுதி பெண் ஒருவர் வேகமாக வந்து மைதீன்கானுக்கு ஆரத்தி எடுத்து ரூ. 50-ம் பெற்றுச் சென்றார்.
நன்றி : தினமலர்
“எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.”(அல் குர்ஆன் 69:28-33)