ஆலோசனை கூட்டம்


FRTJ  யின் இரண்டாவது நிர்வாகம் தேர்ந்து தெடுக்கப்பட்டபின் 
நடைபெற்ற முதலாவது  ஆலோசனை கூட்டம் கடந்த
சனிக்கிழமை 24-08-2013 அன்று மதியம் 15h00 மணிக்கு பிரான்ஸ் மண்டல  பொருளாளர் சகோதரர்  அப்துல் ஹக்கீம்  அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக பிரான்ஸ் மண்டல தலைவர்  சகோதரர் ருக்னுதீன்  “ரமலான் தரும் படிப்பினை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பிறகு பிறை மற்றும் பெருநாள் தொழுகை பற்றிய கருத்துகள் நம் கொள்கை சகோதரர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

 1. FRTJ  உறுப்பினர் சேர்க்கைக்கும் மற்றும்  அடையாள அட்டை பெறுவதற்கு நிகழ்ச்சிக்கு வரும் சகோதரர்கள் 2 போட்டோ எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . சில சகோதரர்கள் எடுத்து வராததால் விரைவில் அவர்களிடம் இருந்து போட்டோவை பெற்று அவர்களுக்கு அடையாள அட்டை  பெற்று தரப்படும்.

2.FRTJ அணைத்து பகுதிகளுக்கும் அறிமுகம் செய்யும் வகையில் 
பிரான்சின் பல பகுதிகளுக்கு


சென்று தாவா செய்யவும் மற்றும் கிளைகளை உருவாக்கவும் நமது frtj  நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.

 3.எதிர் வரும் காலங்களில் நடைப்பெற இருக்கும் பெருநாள் தொழுகைகளை நபி வழியில் நடத்துவதற்கு நமது FRTJ  நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.

4.பிரான்சில் முதல் முறையாக மாற்று மத சகோதரர்களுக்காக ” இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ” நிகழ்ச்சி நடத்துவதற்கும்  ஆலோசிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகள்    செய்யப்படும.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் பங்குபெறும்  மாற்று மத  சகோதரர்களுக்கு  குரான் தர்ஜுமா மற்றும் ஏகத்துவ புத்தகங்கள் வழங்கப்படும்.

 6.புதிய தலைமை கட்டிட நிதிக்கு ஆகும் செலவு நமது frtj  நிர்வாகிகளும்  மற்றும் நமது உறுப்பினர்களும் அவர்களுடைய பங்களிப்பை செய்ய இருக்கின்றார்கள்  அத்தொகையை இன்ஷா அல்லாஹ் விரைவில் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.

 ஆலோசனை கூட்டதை சிறப்பாக நடத்தி வைத்த எல்லா வல்லஅல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்லாஹ் அக்பர்.

 இறுதியாக FRTJ யின் செயலாளர்  சம்சுதீன்
அவர்கள்  நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இவன்
சம்சுதீன்
FRTJ செயலாளர்
26-08-2013.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.