கேள்வி : gold (thangam) patriya zakathin sattathittaththinai tayayu sethu vilakkavu?
தமிழாக்கம் :தங்கம் பற்றிய ஜக்காதின் சட்டத்தினை தயவு செய்து விளக்கவும்?
– mohidin farhan – uk
பதில் : இஸ்லாம் வசதியுள்ளவர்கள் மீது ஸக்காத் என்ற ஒரு கடமையை விதித்திருக்கிறது. இந்தச் சட்டம் சில சந்தப்பங்களில் வித்தியாசப்படும்.
- கால்நடைகளுக்கு ஸகாத்.
- விளை நிலங்களுக்கு ஸகாத்.
- மானாவரியாக விளைபவற்றுக்கு ஸக்காத்.
தங்கம், வெள்ளிக்கு ஸக்காத், என்ற பலவிதமான ஸக்காத் முறைகளை இஸ்லாம் பிரித்துப் பிரித்து விளக்குகின்றது.
இதில் தங்கத்திற்குறிய ஸக்காத் என்ன என்பதுதான் உங்கள் கேள்வியாகும்.
தங்கத்திற்கு இரண்டரை சதவீதம் ஸக்காத் கடமையாகும். அதாவது 11 பவுன் தங்கம் (சுமார் 85 கிராம்) ஒருவரிடம் இருந்தால் அதில் இரண்டரை சதவீதத்தை ஸக்காத்தாக வளங்க வேண்டும்.
பதில் : ரஸ்மின் MISc