Name (பெயர்) : INSAAF
Country (நாடு) : FRANCE
Topic (தலைப்பு) : இறை நம்பிக்கை
Country (நாடு) : FRANCE
Topic (தலைப்பு) : இறை நம்பிக்கை
நம்மில் ஒரு சிலர் அல்லாஹ்வை நம்புகிறோம் ஆனால் மறுமையை நம்புவதில்லை இறுதிநாளை நம்புவதில்லை விதியை நம்புவதில்லை சொர்க்கம் மற்றும் நரகத்திலும் நம்பிக்கையே இல்லை மாறாக தன் செல்வத்தையும் (எதிர்காலத்தில் காப்பற்றுவார்கள் என) பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் நம்புகிறார்கள் ஆனால் இறைவனை நம்பும் விதத்தில் நம்புவதில்லை.அவனுடைய வல்லமையையும்,கருணையையும் நம்புவதில்லை.
ஒரு முஹ்மின் என்பவர் எதையெல்லாம் நம்ப வேண்டும் என்றால்
- அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு இணை இல்லை என்றும் முதலில் நம்ப வேண்டும்,
- பிறகு மலக்குகளை நம்ப வேண்டும் ,
- வேதங்களை நம்ப வேண்டும்,
- நபிமார்களை நம்ப வேண்டும் ,
- இறுதிநாளை நம்ப வேண்டும்
- நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்று நம்ப வேண்டும் ,
- மரணத்திற்கு பின்பு மீண்டும் எழுப்ப படுவோம் என்றும் நம்ப வேண்டும் .
ஒரு சிலர் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் சமுதாயத்திற்க்கும், ஊருக்கும், உறவினர்களுக்கும் அஞ்சுகிறார்கள் யார் அல்லாஹ்வை அஞ்சவில்லையோ அவர்கள் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு அஞ்சியே வாழ்வதை கண்கூடாக காண்கிறோம்.
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல்குரான் 2:177 )
“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பினோம் எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.( அல்குர்ஆன் 2:8)
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர் (உண்மையில்) தம்மை தாமே ஏமாற்றி கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை (அல்குரான் 2:9 )
அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை (அல்குரான் 2:9.)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (அல்குரான் 2:28)
அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால்,அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள். (அல்குரான் 22:35)
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குரான் 2:3.)
நன்மையும், தீமையும், இன்பமும், துன்பமும், உயர்வும்,தாழ்வும், ஆட்சியும், அதிகாரமும்,செல்வமும், ஏழ்மையும், அனைத்தும் அவனிடமிருந்து வந்ததுதான் என்று நம்ப வேண்டும் மேலும் அவன் அடியார்களுக்கு நன்மையே செய்கிறவன் என்றும் நம்ப வேண்டும் தன் படைப்புகளிடம் பாரபட்சம் காட்டவும் மாட்டான் என்றும் நம்ப வேண்டும்.எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு முன் நாம் அனைவரும் அடிமைகளே!
ஒரு சிலருக்கு தனிச்சிறப்புகள் இருப்பதாக எண்ணிக்கொண்டு அவர்கள் நல்லடியார்கள் என்றும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்றும் தவறாக எண்ணிக்கொண்டு அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்ற பெயரில் ஷிர்க் எனும் எனும் இணைவைப்பில் விழுந்து விடுகிறார்கள் மேலும்அவுலியாக்கள் நல்லடியார்கள் என்று அவர்களிடம் சென்று பிரார்த்திக்கிறார்கள்.ஆனால் நல்லடியார்கள் யார் என்பது மறுமையில் தான் தெரியும்.
மேலும் சிலரிடம் ஏன் அவுலியாக்களை நாடி செல்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு (அவ்லியாக்களுக்கு) துஆ செய்வதற்கே செல்கிறோம் என்கின்றனர் , நாம் அவர்களிடம் இறந்த உங்களது தாயோ தந்தையோ உறவினர்களோ உங்கள் ஊரிலேயே அடக்கம் செய்யப் பட்டிருப்பார்கள் அவர்களுக்காக என்றாவது இந்த அளவிற்கு முயற்சி எடுத்து மையவாடிக்கு (கப்ருஸ்தான்) சென்று அவர்களது கப்ரு வாழ்க்கை மற்றும் நிலையான மறுமை வாழ்க்கைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்திருப்போமா? சற்று சிந்தித்து பார்க்கவேண்டும் சகோதர சகோதரிகளே
“வானங்களையும் ,பூமியையும் படைத்தவன் யார்?”என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள் “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்திப்பவை பற்றி கூறுங்கள்”! என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளை தடுக்க கூடியவர்களா? அல்லாஹ் எனக்கு போதும்.சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறுவீராக (அல்குரான் 39:38)
அவன் இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும் சந்திரனையும் தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஓவொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை செல்கின்றன அவனே அல்லாஹ் உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்,அணுவளவும் அதிகாரம் படைதவர்களல்ல (அல்குரான் 35:13)
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குரான் 35:14)
நாம் நமது வீட்டிலோ தொழில் நிறுவனத்திலோ நமது அதிகாரத்தை யாருக்காவது விட்டுக்கொடுப்போமா அப்படி இருக்கம் போது அனைத்தையுமே படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் அவனுடைய அதிகாரத்தை பங்கிடுவதை எப்படி பொருத்துகொள்வான், மன்னிப்பான்.
அவர்களுக்கு அதிகாரத்தில் ஏதேனும் பங்கு உள்ளதா? அப்படி இருந்திருந்தால் அற்பமான பொருளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.(அல்குரான்4:53)
அவர்களுக்கு அதிகாரத்தில் ஏதேனும் பங்கு உள்ளதா? அப்படி இருந்திருந்தால் அற்பமான பொருளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.(அல்குரான்4:53)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?(அல்குரான்2:107)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.(அல்குரான்3:189).